Friday, December 3, 2010

PC - ஒரு பார்வை

தற்காலத்தில் PC எனப்படும் Personal Computer-ஐ உபயோக்காதவர்களே இல்லை என சொல்லுமளவுக்கு இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் ஒரு முக்கியமான பாகம் Microprocessor ஆகும். மற்றும் இதில் Memory, Hard Disk, Modem போன்றவைகளும் உள்ளன.


இந்த
PC - 1970-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதை, Mr.Ed Roberts என்பவர் Intel-இன் Microprocessor-ஐ உபயோகித்து வடிவமைத்து அதற்கு Altair 8800 என்று பெயரிட்டு $395-க்கு விற்பனை செய்துவந்தார்.

சில வருடஙகளுக்குப் பிறகு Apple நிறுவனம், Apple II கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தபின் கம்ப்யூட்டரின் வளர்ச்சி அபரிமிதமாகையது.பிறகு, Commodore, Atari மற்றும் Texas Instruments கம்ப்யூட்டர் தயரிப்பில் ஈடுபட்டாலும், IBM, Apple நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் பின்வாங்கின.

ஆரம்பத்தில் மிகப்பெரியதாய் இருந்த இந்த PC தற்காலத்தில் உள்ளங்கை அளவிற்கு வந்துவிட்டது, இருந்தாலும், அடிப்படை தத்துவம் ஒன்றுதான்.


இப்போது, PC-இன் பல்வேறு பாகங்களைப் பார்ப்போம்,



Central Processing Unit (CPU) - இதை கம்ப்யூட்டரின் மூளை என்று சொன்னால் அது மிகையாகாது, இது Assembly Language-ஐ கொண்டு இயங்குகிறது, ஒரு கம்ப்யூட்டரின் அனைத்து செயல்களையும் இதுவே தீர்மானிக்கிறது.


Memory - இதில் இரண்டு வகைகள் உள்ளன, அவை :


Random Access Memory (RAM) - இது ஒரு தற்காலிக Memory ஆகும். ஒரு கம்ப்யூட்டர் இயங்கும்போது, அதன் தகவல்களை தற்காலிகமாக சேமிக்க இது பயன்படுகிறது.

Read Only Memory (ROM) - இது ஒரு நிரந்தரவகை Memory ஆகும். கம்ப்யூட்டரின்
முக்கியமான தகவல்களை நிரந்தரமாக சேமிக்க இது பயன்படுகிறது.


Hard Disk - இதுவும் ஒரு நிரந்தரவகை Memory ஆகும், கம்ப்யூட்டரின் Operating System எனப்படும் இயங்குதளம் இதில்தான் நிறுவப்படுகிறது. இதைப்பற்றிய விளக்கமான பதிவு ஏற்கனவே இந்த வலைதளத்தில் உள்ளது.


Modem - இது உங்கள் கம்ப்யூட்டரை Internet - உடன் இணைக்கப்பயன்படுகிறது.


Sound Card - இது உங்கள் கம்ப்யூட்டரில் இசையை கேட்கபயன்படுகிறது, இதனுடன் Speaker - ஐ இணைத்து பயன்படுத்தவேண்டும்.




Motherboard - இது ஒரு கம்ப்யூட்டரின் மிக மிக்கியமான பாகம் ஆகும், இதில்தான் மேலேசொல்லப்பட்ட CPU, Memory மற்றும் பிற பாகங்களான Hard Disk, Power Supply, Sound Card போன்றவை இணைக்கப்படுகின்றன.



இதைத்தவிர, Motherboard-இல் LAN Port, USB Port, Parallel Port, IDE Connector, SATA Connector போன்றவைகள் உள்ளன.

அடுத்த பதிவில் நாம் கம்ப்யூட்டர் எவ்வாறு இயங்குகிறது என்று பார்ப்போம்.


PC - ஒரு பார்வை - தொடர்ச்சி...


சென்ற பதிவில் நாம் கம்ப்யூட்டரின் பாகஙகளை பற்றி பார்த்தோம், இப்பொது அது எவ்வாறு இயங்குகிறது என்று பார்ப்போம்;


கம்ப்யூட்டரின் அனைத்து Hardware பற்றிய விவரங்களும் அதன் BIOS (Basic Input / Output System) எனப்படும் அதன் Memory-இல் பதிவாகி இருக்கும். நாம் கம்ப்யூட்டரை ON செய்யும்போது BIOS ஆனது அனைத்து Hardware-களும் ஒழுங்காக இணைக்கப்பட்டுள்ளனவா என்று சோதித்து பார்த்து பின்னரே Booting-க்கு அனுமதிக்கும். இதை Power On Self Test (POST) என அழைப்பர்.

இந்த BIOS Settings ஒரு சிறிய மின்கலம் (Battery, 3V) மூலம் எப்பொதும் இயங்கிகொண்டே இருக்கும், இதனால் Date, Time போன்றவைகளை ஒருமுறை Set செய்துவிட்டாலே போதும், கம்ப்யூட்டர் Boot ஆனவுடன் Date, Time போன்றவைகளை தானாகவே எடுத்துக்கொள்ளும். மின்கலம் தன் சக்தியை இழந்துவிட்டால், Boot ஆகும்பொது Error Message திரையில் தெரியும், கம்ப்யூட்டர் Boot ஆனவுடன் Date, Time போன்றவைகளை ஒவ்வருமுறையும் Set செய்யவேண்டியது வரும், இதற்கு மின்கலத்தை மற்றுவதே ஒரே வழி.

இந்த BIOS Settings - ஐ பார்க்க, F2 அல்லது Del Key-களை Press செய்து Setup Program Screen - க்குள் செல்லாலாம், நமக்கு தேவையானவைகளை மாற்றி பின் அதை Save செய்யலாம். அதில் உள்ள Quick Boot Option-ஐ Enable செய்தால் POST எனப்படும் Initial Checking Screen-ஐ விரைவாக கடக்கலாம், இதனால் Booting Time குறையும்.


பொதுவாக, Booting இரண்டு வகைப்படும், அவை Cold Boot மற்றும் Reboot.

Cold Boot - கம்ப்யூட்டரின் மொத்த இயக்கத்தையும் நிருத்தி பின் ON செய்வது
Reboot - Ctrl + Alt + Del Command அல்லது, Windows-இல் Restart Option Use
செய்து கம்ப்யூட்டரை Boot செய்வது.

BIOS-ஆனது, System Boot - ஆகும்போது அது எந்த வகையான Boot என்று கீழ்கண்ட வகையில் சோதித்து பார்க்கும், அதன் Memory Address 0000:0472 - இல் 1234h என விடை கிடைத்தால் அது Reboot என முடிவெடுத்து POST-ஐ Skip செய்து விரைவாக Boot ஆகும். இல்லையென்றால் அது கம்ப்யூட்டரின் அனைத்து பாகங்களும் ஒழுங்காக இணைக்கப்பட்டுள்ளனவா என சோதித்து பின்னர் Boot ஆகும். கம்ப்யூட்டர் Cold Boot ஆகும்போது கீழ்கண்டவற்றின் விபரங்களை திரையில் பார்க்கலாம்,

Processor
Memory
Bios Version
Hard Disk
Floppy Drive
CD/DVD Drive



இவற்றில் ஏதேனும் குறைபாடு இருந்தாலோ அல்லது சரியாக இணைக்கப்படவில்லை- யென்றாலோ திரையில் Error Message தெரியும், பின் F1 Key Press செய்தோ அல்லது குறையை சரிசெய்த பின்னரே Boot செய்யமுடியும். இந்த BIOS Setup-க்கு Complementary Metal-Oxide Semiconductor (CMOS) Setup என்று பெயர். இந்த செயலுக்கு Boot Sequence என்று பெயர்.



இந்த Boot Sequence முடிந்தவுடன் Primary Hard Disk மூலமாகவோ அல்லது BIOS-இல் குறித்துள்ள Booting Order படியோ கம்ப்யூட்டர் Boot ஆகும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டர் இயங்க ஒரு இயங்குதளம் (Operating System) வேண்டும், அந்த இயங்குதளம் Windows XP ஆகவோ Linux ஆகவோ இருக்கலாம். Excel, Word, PowerPoint மற்றும் பல Software-கள் இயங்குதளதில் இயங்கும் Applications ஆகும்.

இயங்குதளத்தைப் பொறுத்து கம்ப்யூட்டரின் Performance வேறுபடும்.

No comments:

Post a Comment