சமையல்

கோழி மசாலா - அட அட அட.. என்ன ருசி?
















தேவையான பொருட்கள் :


கோழி - கொஞ்சம். 2 பேருக்கு :)
தயிர் - 1/2 குவளை
பெரிய வெங்காயம் - 1
மிளகு - 10
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5
சீரகம் - 1 தே.கரண்டிகிராம்பு
ஏலக்காய் - 5
பட்டை - 1
மஞ்சத்தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாத்தூள் - 1 தே.கரண்டி
இறைச்சித்தூள் - 2 தே.கரண்டி
எண்ணெய் & உப்பு - தே.அளவு




செய்முறை :
1. கோழித்துண்டுகளை வெட்டி, மஞ்சத்தூள், தயிர் சேர்த்து, 1/2 மணி நேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை ஊறவைக்கவும்.
2. பெரிய வெங்காயத்தை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
3. கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகு, சீரகம் ஆகியவற்றை வறுத்து இடித்துக்கொள்ளவும். அது போல, இஞ்சி பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
4. சட்டியில் எண்ணெய் ஊற்றி வெட்டிய வெங்காயத்தை வதக்கி, அதனுடன் மசாலா கலவைச் சேர்க்கவும். பின்னர் மிளகாய்த்தூள், இறைச்சித்தூளைக் கலந்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
5. அதனுடன் ஊற வைத்த கோழித்துண்டுகளைச் சேர்த்து, உப்பு இட்டு வேக வைத்து இறக்கவும்.

மிளகு இறைச்சி பிரட்டல் - அட அட அட.. என்ன ருசி?


காரமான இறைச்சி பிரட்டல்.. அட்டகாசமாக இருக்கும்.
சமைச்சிப் பாருங்க. தேவையான பொருட்கள் :


எலும்பில்லாத இறைச்சி - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 
தக்காளி - 
முந்திரி பருப்பு - 10இஞ்சி - கொஞ்சம்
பூண்டு - 10மிளகு - தே. கரண்டி
சோம்பு - 1 தே. கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு & எண்ணெய் - தே. அளவு
நெய் - தே. கரண்டி




செய்முறை :
1. இறைச்சியை சுத்தம் செய்துக் கொள்ளவும்.
2. வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, சோம்பு, இஞ்சி, பூண்டு, முந்திரி, வெட்டிய தக்காளி, மிளகாய்த்தூள் சேர்த்து, வதக்கவும். அவற்றை அரைத்தும் கொள்ளவும்.
3. அரைத்தவற்றுடன் உப்பை சேர்த்து இறைச்சியில் பிசறவும். அதனை வேக வைக்கவும்.
4. மீதமிருக்கும் எண்ணெயில் நெய் சேர்த்து வெங்காயம், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
5. அதனுடன் வேக வைத்த இறைச்சியைக் கொட்டிக் கிளவும்.
6. வறுத்து இடித்த மிளகுத்தூளைக் கொட்டி இறைச்சியைப்
பிரட்டி எடுக்கவும்

கேசரி

தேவையானவை
ரவா-1 கப்
சீனி -1.1/கப்,அல்லது2 கப்
தண்ணீர்- 3  கப்
நெய்-3 கப்
தேங்காய் யெண்ணை-1 மேசை கரண்டி
எலக்காய்- 4/வெண்ணிலா யெசன்ஸ்
குங்குமப்பூ- 3(பாலில் ஊரவைத்தது)
முந்திரி, பாதாம், கிஸ்மிஸ் விரும்பிய அளவு
கேசரி களர்-1 சிடிகை
அன்னாசி பழம் (பைன்னப்பிள்) -1/4 பழம் விருப்பபட்டால்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் ரவையை சிறிது நெய் ஊற்றி பச்சை வாசம் போகும் வரை நிறமாறமல் வறுத்து ஆறவிடவும்.
அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி 3 கப் தண்ணீர் ஊற்றி,2 அல்லது 3 பங்கு சீனி,அன்னாசி,கேசரி கலர் சேர்த்து, கொதிக்கவிடவும், கொதிவந்ததும், ஒரு பக்கமாக வருத்து ஆறிய ரவையை கொஞ்சம், கொஞ்சமாக கட்டி விடாமல் சேர்க்கவும்( கட்டி இருந்தால் உடைத்து விடவும்) அடுப்பை மிதமான தீயில்வைத்து ரவையை வேகவிடவும்(குங்குமப்பூவை சேர்க்கலாம்), வேகும்போதே சிறிது நெய், தேங்காய் யெண்ணையை சுற்றி விடவும், கேசரி இளக்கம் கொடுக்கும் வெந்ததும் மிதம் உள்ள நெய்யை சேர்க்கவும், பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி எலக்காய், முந்திரி, பாதாம், கிஸ்மிஸ் சேர்த்து தாளித்ம் செய்து கிளறவும்.
*சுவையான கேசரி தயார்

அதிரசம்

தேவையானவை: y1p22R7i02RUGLnrmhIqYnsVFAFOmelX5J_nMtBkYHoepl2okp-jTo9QkwFL0uyw56Za13lc38gF5QIZBpbYuWsv19d9W2lFg5C
பச்சரிசி(மாவு அரிசி)-1கிலோ
மண்டைவெல்லம்-3/4கிலோ
சுக்கு-சிறிது
எலக்காய்-7
வெள்ளை எள்-2 தேக்கரண்டி
நெய்-1 மேசைக்கரண்டி
யெண்ணை- பொறிப்பதற்க்கு.
செய்முறை:  அரிசியை கழைந்து, தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவிடவும், பின்பு அரிசியை நிழலில் உலர்த்தி, மிக்ஸ்சி/ம்ஷினில் அரைக்கவும். ஒருப்பாத்திரத்தில் தண்ணீர்(வெல்லம் மூழ்கும் வரை) ஊற்றி வெல்லத்தை அடுப்பில் வைத்து கரைந்தவுட்ன் வடிகட்டவும், பின்பு அடி கணமான பாத்திரத்தில் மாற்றி பாகு காச்சவும், பாகு ஊருண்டை பதம் வந்தவுடன் நிறுத்தவும்(ஒரு சின்ன கின்னத்தில் தண்ணீர் ஊற்றி அருகில் வைத்துக்கொண்டு பாகு பதம் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்) பாகு சரியாக எடுக்கவேண்டும்.
மாவில் சுக்கு, எலக்காய்,அரைத்து கலக்கவும், மாவை சிறிது, சிறிதாக பாகில் சேர்க்கவும், சப்பாத்தி பதம் வந்தவுடன் நிறுத்தவும். மாவு மேலே நெய் சிறிது தட்டி வைக்கவும். மாவை மூடி வைக்கவும் ஒர் நாள் கழித்து, வாழை இலையில் நெய்த்தடவி எள் சேர்த்து மிதமான தீயில் ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும்.
மிக முறுகலான, உள்ளெ மெருதுவான அதிரசம் தயார்

இனிப்பு சோமாஸ்                                 
                                                                                                
                                                                                                   தேவையான பொருட்கள்

ரவை - 1/2 கிலோ 
மைதா - 1/2 கிலோ
பூரணம் செய்ய
நிலக்கடலை - 100 கிராம்
பொட்டுக்கடலை - 100 கிராம்
வெல்லம் - 1/4 கிலோ ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
எண்ணெய் - 1/2 லிட்டர்
செய்முறை

1. 
நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

2. 
பொட்டுக்கடலையை தனியே மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

3. 
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நன்கு பொடித்து அதனுடன் ஏற்கனவே பொடித்து வைத்துள்ள நிலக்கடலைபொட்டுக்கடலைஏலக்காய் போன்றவற்றைச் சேர்த்து நன்கு கிளறவும். இப்போது பூரணம் தயார்.

4. 
அடுப்பில் வாணலியை வைத்து ரவையை கொட்டி லேசாக வறுத்துமிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

5. 
ஒரு பாத்திரத்தில் மைதா மாவுபொடித்து வைத்துள்ள ரவைஒரு சிட்டிகை உப்புதேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.

6. 
சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து பூரிக்கு தேய்ப்பது போல் தேய்த்து நடுவில் முதல் தேக்கரண்டி கலந்து வைத்துள்ள பூரணம் வைத்து இரண்டாக மடித்து ஓரங்களை நன்கு அழுத்தி ஒட்டவும்.

7. 
பிறகு கடையில் விற்கும் நெளி தேக்கரண்டியையோ அல்லது சோமாஸ் செய்வதற்கான அச்சையோ பயன்படுத்தி ஓரங்களை அழகு பட வெட்டவும். இவை எதுவும் கிடைக்காத பட்சத்தில் கத்தி கொண்டு ஒரே சீராக ஓரங்களை வெட்டிக் கொள்ளவும்.

8. 
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமாகக் காய்ந்ததும் ஒட்டி வைத்துள சோமாஸ்களை எண்ணையில் போட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும். வடிதட்டில் போட்டு எண்ணெய் வடிந்ததும் காற்று புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்து சாப்பிட்டு மகிழவும்.
குறிப்பு

1. 
ஏலக்காய் பொடி செய்யும் போது தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

2. 
பூரணம் மிகுதியாகிவிட்டால் லேசாக தண்ணீர் தெளித்து உருண்டை பிடித்து நிலக்கடலை உருண்டையாகவும் செய்து கொள்ளலாம்.

மெது வடை













உழுந்து-1 கப்
பச்சரிசி மாவு-1 மேசைக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி
மிளகு- 1 தேக்கரண்டி
மல்லி இலை- சிறிதாக நறுக்கியது
கருவெப்பிள்ளை- சிறிதாக நறுக்கியது
சின்ன வெங்காயம்- 4 சிறிதாக நறுக்கியது
காரட்,கோஸ்-துறுவியது(விருப்பப்ட்டால்)
உப்பு-தேவையான அளவு
யெண்ணை- பொறிப்பதற்க்கு
செய்முறை: உழுந்தை களைந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும், தண்ணீர்விடாமல்(சிறிது தெளித்துக்கொள்ளலாம்) நன்றாக பொங்கிவரும் வரை அறைத்து எடுக்கவும்.
வடை மாவில் பச்சரிசி மாவு,சீரகம்,மிளகு,மல்லி இலை, கறுவெப்பிள்ளை, சின்ன வெங்காயம் சிறிதாக நறுக்கியது,காரட்,கோஸ்-துறுவியது,உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் யெண்ணை ஊற்றி யெண்ணை காய்ந்ததும், மிதமான தீயில் வைக்கவும்.
பாலிதின் பேப்பர் அல்லது இலையில் யெண்ணை தடவி, அதில் கொஞ்ம் வடை மாவை வைத்து தட்டி துளையிட்டு, பொண் நிறமாக பொறித்து எடுக்கவும்.
வடையை போட்டவுடன் திருப்பக்கூடாது சிறிது வெந்தவுடன் லெசாக திருப்பவும்.
* வடை ஒன்றொடு ஒன்று ஒட்டும்படி போடக்கூடாது

குழிப்பணியாரம், இனிப்பு


















செய்ய தேவையானவ: பச்ச அரிசி 1/2 கப்,
புழுங்கலரிசி 1/2 கப்
உழுந்து-1/2 கப்
வெந்தயம்-1 தேக்கரண்டி
வெல்லம் 1 கப் (துறுவியது)
சுக்கு: 1 சிறியத்துண்டு(பொடிதுக்கொள்ளவும்)
ஏலக்காய்: 4(நுணிக்கியது)
தேங்காய்- 1 சில்லு சிறிதாக நறுக்கியது
முந்திரி பருப்பு- 10 சிறிதாக நறுக்கியது
இவைகளை நெய்யில் வறுத்து மாவுடன் கல்லில் ஊற்றும் முன் கலக்கவும்
செய்முறை: மாவை இட்லி மாவு அறைப்பது போல் அறைத்து உப்பு சேர்த்து புளிக்கவைக்க்கவும், பின்பு சுக்கு பொடித்தது,நெய்யில் வருத்த தேங்காய், முந்திரிம், வெல்லம் துறுவியது சேர்த்து, குழிப்பணியாரச்சட்டியில் நெய்/ யெண்ணை( இனிப்பிற்க்கு) ஊற்றி, மாவை சிறு கரண்டியால் ஊற்றி, சிறிது நேரம் கழித்து சிறு கரண்டியால் திருப்பி, இருபுறமும் பொன்னிற்ம் வரும்வரை  வேகவைத்து ஊசியால் எடுக்கவும்.
இதனை சுக்கு, ஏலம் கலந்த வெல்லப்பாகுடன் சேர்த்து சாப்பிடலாம்.
அடுப்பை நன்றாக சூடு செய்தபின்னர், மிதமான தீயில்வைத்து சமைக்கவும்.
                         
                        முறுக்கு : ஸ்விட் சுருள் முறுக்கு /மடக்கு










முறுக்கு : ஸ்விட் சுருள் முறுக்கு /மடக்கு
தமிழ் நாட்டில் பட்டுக்கோட்டை, தஞ்சை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் இப்பலகாரம் மிகவும் பிரசித்தம்
தேவையானவை: பச்சரிசி மாவு-1 கப்
உழுந்து வருத்து பொடி செய்தது-1/4 கப்
பாசி பருப்பு வருத்து பொடி செய்தது-1/4 கப்
வஸ்பதி/வெண்ணை-1 தேக்கரண்டி
உப்பு-சிறிதளவு
வெள்ளை எள்-1 தேக்கரண்டி
சீனி பாகுக்கு: 1கப் சீனி
தண்ணீர்-சீனி மூழ்கும் வரை
பொறிபதற்க்கு:  எண்ணெய்
செய்முறை: பச்சரிசி மாவு, உழுந்து வருத்து பொடி செய்தது, பாசிபருப்பு வருத்து பொடி செய்தது, வஸ்பதி/வெண்ணை, உப்பு, வெள்ளை எள், அகியவற்றை, தண்ணீர் சிறிது, சிறிதாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும், சிறிய உருண்டைகளாக செய்து, சப்பாத்தி கல்லில் தேய்க்கவும், சிறிய பூரிகளாக தேக்காவும், தேத்த பூரிகளை சுருட்டி ,  ஒவ்வொன்றாக பொறிக்கவும். பொன் நிறமாக பொறித்து தனியெ வைக்கவும்.
ஒரு அடி கனமான பத்திரத்தில் சீனியை அதன் மேல் மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றவும், பாகு கொதித்து ஒரு கம்பிப்பததிற்க்கு வரும் வரை வைக்கவும். ஆறிய சுருள் முறுக்கு மேல் ஊற்றி நன்கு குலுக்கி எல்லா சுருள் மீது படுமாரு பிரட்டவும், சூப்பரான சுருள் ஸ்விட் முறுக்கு தயார்.

                         ஓமப்பொடி

IMAGE_575
ஓமப்பொடி
தேவையானவை
கடலை மாவு- 2கப்
அரிசி மாவு 2 -கப்
வெண்னை 2 -கரண்டி
ஓமம் 1-கரண்டி(பொடி செய்தது)
லெமன் கலர்-3/4 கரண்டி.
உப்பு-தேவையான அளவு
யெண்னை பொறிபத்ற்க்கு.
தண்ணீர் தேவையான அளவு.
செய்முறை:
கடலை மாவு- 2கப், அரிசி மாவு 2 -கப்,வெண்னை 2 -கரண்டி,ஓமம் 1-கரண்டி, உப்பு அனைத்தையும் சேர்த்து ஒன்றாக பிசைந்து, தண்ணீர் சிறிது,சிறிதாக சேர்த்து ,கலரையும் சேர்க்கவும். மெதுவகவரும்வரை பிசைந்த்து, குழழில் யெண்னை தடவி, காந்தயெண்னையில் மிதமான தீயில் பொறித்தெடுக்கவும்.
சுவையான ஓமப்பொடி தயார்.

                              முள் முறுக்கு

IMAGE_557
தேவையானவை:
பச்சரிசி-1 அழக்கு
உழுந்து-2மேசைக்கரண்டி
பொடு கடலை-2 மேசைக் கரண்டி
பாசி பருப்பு-2 மேசைக்கரண்டி
சிரகம்/எள்-சிறிது
வெண்ணை-1மேசைக் கரண்டி
உப்பு தேவைக்கேற்ப்ப
செய்முறை: அரிசியை சுத்தமான துணில் துடைத்துக் கொள்ளவும்,
உழுந்து,பொடு கடலை,பாசி பருப்பை தனித்தனியாக வருக்கவும்
பின்பு, அரிசியை சேர்த்து மிஷ்னில் அரைக்கவும்.
மாவோடு,எள்,உப்பு, வெண்ணையையும் சேர்த்து பிசையவும்,பின்னர் காய்ந்த யெண்ணையில் மிதமான சூட்டில், முள்முருக்கு அச்சில் பிழிந்து இலையில் இட்டு பின் பொரிக்கவும்.
சுவையான முள்முறுக்கு தயார்

மைசூர் பாக்

                                    மைசூர் பாக்
IMAGE_570
















தேவையானவை: 
கடலை மாவு-1கப்
சீனி-2 கப்
நெய்-3கப்
சமையல் சோடா-1 சிட்டிகை
தண்ணீர்-1கப்
பால்- 1 மேசை கரண்டி
செய்முறை: கடலைமாவை சலித்து, சிறிது நெய்விட்டு வாசம்வரும் வருவரை வருக்கவும். பின் தனியாக ஆறவிடவும், ஓருஅடுப்பில் நெயை சிறிய தீயில் காயிச்ச்சவும், அடுத்த அடுப்பில்அடி கனமான பாத்திரதில் சீனி மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கொதிவந்தயுட்ன் பாலை ஊற்றவும் சீனியில் உள்ள அழுக்கு வரும், அதைத்தனியாக கரண்டியால் நீக்கவும், கம்பிபதம் வரும்வரை காய்ச்சவும், பதம்வந்தவுடன் சிறிது, சிறிதாக மாவை சேர்க்கவும், கட்டிவராமல் சேர்க்கவும், நெய்யையும் சிறிது, சிறிதாக ஒரு கரண்டியால் சுற்றி சேர்க்கவும், விடாமல் கிளறி வரவேண்டும் சிறிது நேரத்தில் நெய் பொங்கிவரும் அதுதான் சரியான பதம், சிறிது சமையல் சோடா சேர்த்து கிளறி, ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிது நேர்த்தில் வெட்டவும்.
 சூவையான ஸாப்ட் மைசூர் பாக் ரெடி.