Tuesday, November 23, 2010

ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..

ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..!


ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான் ‘பாலைவனக்கப்பல்’.


ஏனென்றால், " 'சஃபீனத்-அஸ்-ஸஹாரா ' என்று எந்த பண்டைய அரபி இலக்கியங்களிலாவது எழுதப்பட்டு இருக்கிறதா?" என்றால்... அரபிகள்முழிக்கிறார்கள். ஏதோ சில ஆங்கில அறிவு பெற்றவர்களுக்கு மட்டும் ‘தெ ஷிப் ஆப் தெ டெசெர்ட்’ என்றால் தெரிந்திருக்கிறது. அநேகமாய், தங்கள் மகத்தான கண்டுபிடிப்பான ‘கப்பலில்’, மத்தியதரைக்கடலை கடந்து வடக்கு ஆப்பிரிக்காவில் கால்வைத்த ஐரோப்பியர்கள், ஒட்டகத்தையும் பாலைவனத்தையும் முதன்முதலாக பார்த்துவிட்டு.. ‘கடலுக்கு கப்பல்பிரயாணம் - பாலைக்கு ஒட்டகபிரயாணம்’ என்று மட்டுமே உணர்ந்து சொன்ன வாக்கியமாக இருக்கலாம்.

மழை, புயல், காட்டாற்று வெள்ளம், சூறாவளி, பனிப்பாறை, மணல்திட்டு, அடித்தள ஓட்டை, சுனாமி போன்ற எந்த ஒரு இயற்கைச்சீற்றத்துக்கும் திடீர் ஆபத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல் இரண்டாக உடைந்து தலை குப்புறக்கவிழ்ந்து மூழ்கும் கப்பல் என்ற மனிதனால் கட்டப்பட்ட ஓர் உயிரற்ற வஸ்து என்பது...., கடும் குளிர், கடும் வெப்பம், கொதிக்கும் மணல், புழுதிக்காற்று, புல்பூண்டு & தண்ணீர் அற்ற வறட்சியில் மாதக்கணக்கில் பிரயாணம் என்று அனைத்து இயற்கை தாக்குதல்களையும் சளைக்காமல் வெற்றிகரமாய் எதிர்கொண்டு பீடுநடைபோடும் இறைவனின் நுண்ணிய படைப்பான ஒட்டகத்துக்கு.... எப்படி ஒப்பாகும்?

(ஓர் அன்பு வேண்டுகோள் : பதிவு நீ.....ளமாகிவிட்ட காரணத்தினால், ஒவ்வொரு முறையும் ‘ ..! ’ போட்ட இடங்களுக்கு அடுத்து ‘சுபஹானல்லாஹ்’சொல்லிக்கொள்ளுங்கள்.)

நிச்சயமாக பாலைவனத்தில், தனிச்சிறப்பு வாய்ந்த தனக்கு ஒப்புமை அற்ற ஒட்டகமானது, பொதுவாக தாவர உண்ணி வகையைச்சேர்ந்த பாலூட்டி பிரிவைச்சார்ந்த ஒரு வீட்டுவிலங்கு. 250 லிருந்து 680 கிலோ எடை வரை வளரும்இவை, பொதுவாக 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன..! ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல்... உணவில்லாமல்... பாலைவனத்தில் பலநாள் வாழக்கூடியது, அதுவும் மாமூலாக செய்யக்கூடிய அனைத்துவேலைகளையும் செய்து கொண்டே..!

எப்படியென்றால், சூரியனின் வெப்பம் கொளுத்தும் கோடையில், கொதிக்கும் மணலில் 50° செல்சியஸ் வெப்பத்தில் உணவின்றி நீரின்றி 8 நாட்கள் வரை... தன் எடையில் 22% இழந்தபின்னும் உயிர் வாழும்..! இதை ஒரு மனிதன் முயற்சித்தால், அவன் தன் உடலில் 8% எடையை எட்டாவது நாள் இழக்க வேண்டிவரும். ஆனால், அதற்கு முன்னரே 36-வது மணிநேரத்திலேயே அவன் இறந்திருப்பான். காரணத்தை போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லும் :- ‘அவன் உடம்பில் 88% நீர்ச்சத்துதான் இருந்தது’ என்று..! ஏனென்றால், அநேக பாலூட்டிகள் தன் உடம்பில் 12%நீர்ச்சத்தை இழந்தாலே இறந்துவிடும். ஆனால், ஒட்டகமா,அப்போது தன் உடலில் உள்ள நீர்ச்சத்தில் 40%-ஐ இழந்தும்உயிர்வாழ்கும்..! இதல்லாம் கோடை காலத்திற்கு சொன்னதுதான். கடும் குளிர் காலத்திலோ ஆறுமாதம் வரை கூட ஒட்டகம் இப்படி நீரின்றி உணவின்றி உயிர்வாழும்..! அதேநேரம், அப்போது, மேய்வதற்குப் புல் போன்ற சிறிது உணவு கிடைத்தால் கூட போதும், அடுத்த 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது..! இடையில் சிறிது தண்ணீர் கிடைத்து விட்டால்... கேட்கவே வேண்டாம்... அந்த கால அளவு இன்னும் பலமடங்கு எகிறும்..!


சிலமாதம் நீர் அருந்தாமல் இருந்த உலர் நிலையில் இருந்து மீண்டு நீர் அருந்தும்பொழுது தன் உடலில் மூன்றில் ஒரு பங்கு எடை அளவிற்கு நீரை 10நிமிடத்தில் குடித்துவிடும்..! (அதாவது450 கிலோ எடைகொண்ட ஓர் ஒட்டகம்150 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடத்தில் குடித்துவிடும்..!) அப்படி நீர் அருந்தியவுடன் 10 நிமிடங்களில் உடலில் நீர்ச்சத்து ஏறிவிடும்..! அதன்இரப்பையில் உள்ள நீர் அறைகளில் நீரை தற்காலிகமாகஏற்றிக் கொள்கிறது..! அங்கிருந்து உறிஞ்சப்பட்டு இரத்தத்தின்சிகப்பு அனுக்களில் ஏற்றி சேமித்துக் கொள்கிறது..! அப்போது அச்சிவப்பணுக்கள் அதன் உண்மையான அளவை விட 240%விரிந்து இடமளிக்கிறது..! பிற விலங்குகளில் நீரற்ற உலர் நிலையில் இருந்து இவ்வளவு விரைவாக நீரை இரத்தத்தால் உறிஞ்சிக்கொள்ள முடியாது. ஏனெனில் இரத்தத்தில் திடீர் என்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் சிவப்பணுக்கள்,வெடித்துவிடும். ஆனால் ஒட்டகத்தின் சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் 240% அளவு விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதால், இவ்வாறு நிகழ்வதில்லை..!
மனிதன் உட்பட எந்த ஒரு விலங்கும் அப்போதையை நிலையில் தேவைக்கு அதிகமாக இவ்வளவு தண்ணீர் குடித்தபின் தேவையற்ற அனைத்தையும் சிறுநீராகவே வெளியேற்றிக்கொண்டு இருக்கும். ஆனால், ஒட்டகமோ...தன்னுடைய சிறுநீரையும் குறைத்துக்கொள்ளும்..!ஒட்டகத்திற்கு இருப்பது போல் சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது..! நம்முடைய சிறுநீரில் அதிகபட்சமாக தாது கழிவுகள் 8 சதமும் 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறு நீரில் 40சதத்திற்கும் அதிகமான கழிவுகளும், குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைவான நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சத்தி வாய்ந்தது அதன் சிறுநீரகம்..! நம்முடை கிட்னியாக இருந்தால் எப்போதோ செயலிழந்திருக்கும். அதுமட்டுமில்லை, இரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்து இறந்து விடுவோம். ஆனால், ஒட்டகம் மட்டும் எப்படி அதிக யூரியாவினால் பாதிப்படையவில்லை என்றால், அதன் ‘விசேஷ லிவர்’ ஆனது யூரியாவை மட்டும் இரத்தத்தில் இருந்து தனியே பிரித்து எடுத்து அதை புரோட்டீனாகவும் தண்ணீராகவும் மாற்றி விடுகிறது..!

ஒட்டகத்தின் சாணத்தை அது போட்ட ஒரு சில மணி நேரத்தில் எரிபொருளாக பயன்படுத்தி விடலாம், என்ற அளவிற்கு உலர்ந்த நிலையில் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது..! பசு... சிறுநீர்/சாணம் வழியாக 20 லிட்டர் நீரை ஒரு நாளைக்கு வெளியேற்றுகிறது. ஆனால் ஒட்டகம் 1 லிட்டர் நீரை கூட இழப்பதில்லை..! அவை அனைத்தையும் ஒட்டக பாலாக மனிதன் கறந்து கொள்ளலாம். கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு பத்து பசுமாடு கொடுக்கும் பாலை ஒரு ஒட்டகம் கொடுக்கிறது..! பசுவின் உடல் சூடு ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி விட்டால் பால் சுரப்பு நின்று விடும். ஆகவே அதை கொட்டகையில் நிழலில் வைத்து அதன் மேல் நீரை ஊற்றியோ, அல்லது ஏ/சி செய்யப்பட்ட ‘குளுகுளு’ இடத்தில் வைத்தோ பராமரிக்க வேண்டும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. பலநாட்கள் வெயிலிலேயே நின்றாலும் கூட பால் கொடுக்கும்..! பசுவிற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒன்று பால் நின்றுவிடும் அல்லது பாலில் கொழுப்பு 30% அதிகரித்து, பால் குடிக்க முடியாத நிலைமைக்கு மாறிவிடும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. கடுமையான கோடையில் கூட குறைந்த அளவு நீரை குடித்துவிட்டு தன் குட்டிக்கும் பாலை கொடுத்துவிட்டு 15லிருந்து 20 லிட்டர்வரை நமக்கும் பால் கொடுக்கும்..! மேலும் பத்து நாட்கள் வரை நீர் கிடைக்காவிட்டால் கூட அதே தரத்தில் அதே அளவு பாலை கொடுக்கும்..! ஒட்டகப் பாலில் பசும்பாலை விட மூன்று மடங்கு வைட்டமின்Cஅதிகம் உள்ளது..! இது காய்கறிகள், பழங்கள் போன்றவை அரிதாக கிடைக்கும் பாலைவன மக்களுக்கு மிக்க அவசியமான உணவு..!

சரி... பாலைவனத்தின் கடும் குளிரையும் கடும் கோடை வெப்பத்தையும் ஒட்டகம் எப்படி தாங்குகிறது?.

ஒட்டகத்தின் ரோமமும், தோலும்அப்படி ஒரு தடிமனானது மட்டுமின்றி அதற்கு சிறந்த வெப்ப தடுப்பானாக பயன்படுகிறது..! அது மட்டுமல்ல. கடும் குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்பநிலையை 34°C லிருந்து 41.7°C வரை (93°F-107°F.)சுயமாக மாற்றிக்கொள்ளும்..! இப்படி தன் உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் 34° செல்சியஸ் வரை குறைத்துக்கொள்வதால், வெளியில் உறைபனி நிலையில் கடுங்குளிர் காற்று அடித்தாலும் தாக்குப்பிடிக்கிறது..! அதேநேரம், கடும் கோடை வெப்பக்காலங்களில் வெளியில் 55° செல்சியஸ் என்று கொளுத்தும்போது, வெப்பம்கடத்தா தன் தடிமனான தோலினாலும், தன் உடல்வெப்பநிலையை 41° செல்சியஸ் வரை கூட்டிக்கொண்டும், தன் உடல் வியர்வையை வெளியிடாமலேயே கடும் வெப்பத்திலும் தாக்குப்பிடிக்கிறது..! இதனால் உடல்நீர் வியர்வை மூலம் விரயமாவதும்தடுக்கப்படுகின்றது..! இந்நிலையிலேயே, ஒட்டகம் ஒன்று ஏறத்தாழ 200 கிலோ கிராம் எடையைச் சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்கவும் செய்யும்..! சிறுதொலைவு ஓட்டப்பந்தயம் வைத்தால் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடவும் செய்யும்..!

நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியின் மேல் விட்டுவிட்டு கண்ணாடியை நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம். நாம்1-லிட்டர் காற்றை சுவாசித்து வெளியேற்றினோம் என்றால் 16மில்லி கிராம் நீரை இழந்திருப்போம். கடும் வெப்பக்காற்றை சுவாசிக்கும் ஒட்டகம் அக்காற்றை ஈரப்படுத்துகிறது..! ஆனால், அதேநேரம், ஒட்டகத்தின் வெளிவிடும் மூச்சில் ஈரம் மனிதனைவிட பல மடங்கு குறைவாக இருக்கும்..! ஏனென்றால் மற்ற எதற்குமில்லாத விசேட மூக்கமைப்பு தான் இதன் காரணம்..! அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தில்,மூன்றில் இரண்டு பகுதியை வெளியேறி விடாமல் தடுத்து விடுகிறது..! மேலும், பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட மோப்ப சத்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு..!

ஒட்டகத்தின் பாத அமைப்பு வித்தியாசமானது..! வெடித்த இருகுளம்புகளையும் சேர்த்து மிக அகன்ற வட்ட வடிவினாலான தட்டையான பாதத்தை கொண்டது. முன்புறம் அதன் இரு குளம்புகளும் விரிந்து கொள்ளும் காரணத்தால் 500கிலோ வரை எடையுள்ள ஒட்டகம் 450 கிலோ வரை சுமையை சுமந்து கொண்டு மணலில் கால்கள் புதைந்து விடாமல் நிலைதடுமாறி கீழே விழுந்துவிடாமல் கொதிக்கும் மணலிலும் ஓட முடிகிறது..! அப்போது, அதன் பாத குளம்புத்தோல் மிகத்தடிமனானதால் கடும் வெப்பத்தினாலும் பாதிக்கப்படாது..!


மனிதர்கள் விலங்குகள் ஆகிய அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகளை மட்டுமே பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்றுமடக்கும்இணைப்புகள் இருக்கும்..! அதனால் தான் ஒட்டகத்தால் எளிதாக பாலைவன மணலின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்க முடிகிறது..! மனிதர்கள் அதன்மீது ஏறி இறங்க விரும்பினால், உடன் எவ்வளவு சூடாக கொதிக்கும் மணலிலும் உடனே முட்டிபோட்டு மண்டி இடும்..! அப்படி மண்டி இடும்போது அதன் முட்டுக்காலிலும், கால் குளம்புத்தொளைப்போன்றே தடிமனான வெப்பத்தினால் பாதிக்கபடாத தோல் அங்கும் அமைந்துள்ளது..! ஒட்டகத்தின் கால்கள் நல்ல உயரமானதாக இருப்பது ஏனென்றால், கடும் கோடையில் பாலைவனத்தில் ஒட்டகம் நடக்கும்போது கொதிக்கும் மணலின் அனல் உக்கிரம் அதன் வயிற்றுப்பகுதி உடம்பில் தாக்காமல் இருக்கத்தான்..! மேலும் உயரமான கால்கள் அதிக எடை சுமக்கவும் அவசியமாகிறது..!


அடுத்து பாலைவனம் என்றாலே புழுதிக்காற்று... மணற்புயல்... பிரசித்தம். அப்படி, மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது ஒட்டகம் (நாம் நம் வீட்டு ஜன்னலை மூடுவது போல்) மூக்கை மூடிக்கொள்ளும்..!தன் ‘கை’யால் இல்லைங்க.. தன் மூக்காலேயே..! அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள்மணலோ தூசியோ காதுகளுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது..! அதன் இரண்டடுக்கு கண் இமையில் உள்ள நீண்ட சீப்பு போன்ற தடித்த நெருக்கமான முடிகள் ஒன்றன் உள் ஒன்றாக கோர்த்துக்கொண்டுமணற்புயலிலிருந்து கண்ணிற்கு முழுப்பாதுகாப்பு அளிக்கிறது..! கண்களுக்கு கீழே உள்ள இமை போன்ற திரை அமைப்பு வாகனத்தின் வைப்பர் போல செயல்பட்டு கண் பரப்பை சுத்தப்படுத்தி கூடுதலாய் கண்களுக்கு பாதுக்காப்பை அளிக்கிறது..! கண்ணிலும் அதன் கண்ணிற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பும், புருவமும் பாலைவனத்து சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்களைதாக்கி விடாமல் வெளிச்சத்தை பாதியாக தடுத்து விடுகிறது..! அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்து இருப்பதால் தலையை திருப்பாமல் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்..! பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்து விடாமல் இருப்பதாற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்..!

பாலைவனம் என்றாலே சப்பாத்திக்கள்ளி, கற்றாழை போன்ற முட்செடிகள் தான் அதிகமாக கிடைக்கும. அதை மேய்வதற்காக அழுத்தமான ரப்பர் போன்ற உதடுகள் கொண்டது ஒட்டகம்..! அதன் உதட்டில் குத்தும் முட்களே உடைந்து விடும் அளவுக்கு தடிமனானது அதன் உதடு..!அந்த விசேஷ உதட்டமைப்பு நாக்கை நீட்டாமல் மேய உதவுகிறது..! புழுதிக்காற்றில் கண்ணைமூடிக்கொண்டு சகட்டுமேனிக்கு பிளாஸ்டிக், தகரம், ஒயர், மண்ணாங்கட்டி என்று கண்டதையும் திண்ணும்..! அதையெல்லாம் தனித்தனியே பிரித்து செரிக்கும் வேலையை அதன் நான்கு அரை கொண்ட விசேஷ இரைப்பை பார்த்துக்கொள்கிறது..! அவசரமாக சாப்பிட்டதை ஆரஅமர நிதானமாய் மீண்டும் வாய்க்கு கொண்டுவந்து அசைபோட்டு உள்ளே தள்ளும்..!

மேலும், இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் பொழுது அவை தேவைக்கதிகமாகஉண்ணப்பட்டு கொழுப்பாக மாற்றப்பட்டு அதன் முதுகில் திமில் அல்லது திமில்களாக சேமித்துக்கொள்கிறது..! சுமார் 45கிலோ எடை இருக்கும் அந்த திமிலில் அதிகமாக கொழுப்பு இருக்கும்..! உணவோ, நீரோ கிடைக்காத காலத்தில் அதன் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும், உணவாகவும் அவ்வப்போது தேவைக்கேற்ப ஆக்சிகரணம் செய்து மாற்றிக் கொள்கிறது..! ஒரு திமில் அல்லது இரு திமில் கொண்ட இருவகையான ஒட்டகங்கள் உள்ளன..! அவற்றில் இரு திமில் ஒட்டகங்கள் அதிக சக்தி பெற்றவை என்று தனியாகவேறு சொல்ல வேண்டுமா?

“அதிலிருந்து இது தோன்றியது, இதிலிருந்து அது தோன்றியது” என்று மற்ற மிருகங்களைப் பற்றியெல்லாம் ஏதாவது ஒரு காமடி விளக்கமாவது கொடுக்கும் 'பரிணாம உலகம்', 'ஒட்டகம் எந்த மிருகத்திலிருந்து பரிணாமம் பெற்றது' என்று கதை புனையவோ அல்லது புனைவை கதைக்கவோ இல்லையே, ஏன்?

இறைவனின் படைப்பாற்றலை புரிந்துகொள்ள இந்த ஒட்டகம் ஒன்று போதவில்லையா?
மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு நாளைக்கு சுமார்50 கீ.மீ பயணம் செய்யும் ஒட்டகம்..., நீரும், உணவும், நல்ல சீதொஷ்ணமும் தாரளமாக கிடைக்கும் ஐரோப்பாவைநோக்கியோ, தெற்கு ஆப்ரிக்காவை நோக்கியோமுறையே, அரேபிய பாலைவனத்திலும், சஹாரா பாலைவனத்திலும் முட்டாள் ஒட்டகம் எப்போதோஓடிபோயிருக்கலாமே..! இப்படி பாலைவனத்தில் கஷ்டப்பட வேண்டிய அவசியம் என்ன? இதை சிந்தித்தாலாவது, 'இது பாலைவாழ் மக்களுக்கு என்றே பிரத்தியேகமாய் இறைவன் படைத்து அளித்த அருட்கொடை' என்று உணரமுடியும்..!

அதனால்தான் இப்படி ஓர் அதிசய மிருகத்தை மானிடருக்கு படைத்தளித்த அல்லாஹ், முஹம்மத் நபி(ஸல்...) அவர்களிடம் இறை நிராகரிப்பாளர்களை சுட்டிகாட்டி தன் திருமறை குர்ஆனில்...

(நபியே) ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் பார்க்கவேண்டாமா?" (88:17) என்றுகேட்கிறான்.

சகோதரர்களே...! எது அறிவுப்பூர்வமானது என்று உங்கள்அறிவை கேட்டுப்பாருங்கள். இறை மறுப்பாளர்களின்போலி வார்த்தைகள் பொலபொலத்து உதிர்ந்து விழுவதைஎளிதில் உணராலாம்.


(சவூதி சென்றபின்னர்தான் நேரில் ஒட்டகத்தை கவனித்தேன். நேரில் கவனிக்க இயலாதவர்களுக்காக சில படங்களை இணைத்துள்ளேன்.)

Monday, November 15, 2010

அழகிய wallpapers முற்றிலும் இலவசமாக ...!

நண்பர்களே உங்களின் கணினிக்கு wallpaper-ஐ
அடிக்கடி மாற்றும் பழக்கம் உள்ளவரா?
அல்லது எந்த wallpaper உங்கள் மனதுக்கு
பிடித்த வண்ணம் இல்லையா?

இதோ ஒரு சுலபமான தீர்வு ...National Geographic இணையதளத்தில் ,
மிகச்சிறந்த புகைப்பட வல்லுனர்கள் எடுக்கப்பட்ட புகைபடங்களை நமக்கு இலவசமாக அளிகின்றது. கிழே உள்ள சுட்டியை சொடுக்கி
wallpaper-ஐ தரவிறக்கி கொள்ளுங்கள்.

National Geographic Wallpapers
ஒரு சாம்பிள் இங்கே ....



Animals,History,Landscapes,Nature & Weather,Patterns in Nature,
People & Culture,Science & Space,Travel,Underwater
போன்ற வகைகளில் அளிக்கின்றது.உங்கள் ரசனைகேற்ப
தரவிறக்கி கொள்ளுங்கள்...
புது வித அனுபவம் பெறுங்கள் ...;)

Spacebook - Dual Screen Laptop Coming in December


உலகின் முதல் இரண்டு திரை உள்ள மடிக்கணினியை Gscreen.( Alaska Based Techonlogy Company) வரும் டிசம்பரில்அறிமுகப்படுத்த உள்ளது.



Expected Configuration
  1. Screen - Dual 15.4 Inch Screen
  2. Processor - Intel Core 2 Duo
  3. Memory - About 4 GB RAM
  4. Graphics - VGA NVidia GF 900M GT Discrete
  5. Hard drive - Powerful 7200 RPM Hard drive(500 GB+)
  6. Battery - 6 to 9 Cell Battery
  7. Price - US$ 3000


இக்கணினி முதல் கட்டமாக Amazon.Com மூலம் கீழ்கண்ட நாடுகளில் கிடைக்கும்.இதில் இந்தியா இல்லை என்பது எரிச்சலூட்டுகின்றது.எனினும் கூடிய விரைவில்,இந்தியாவிலும் கிடைக்கும்.

Australia,Austria,Belgium,Canada,Chile,Czech Republic,Denmark,France,Germany,
HongKong,Hungary,Ireland,Italy,Japan,Luxembourg,Malaysia, Mexico,Netherlands,
New Zealand,Norway Philippines,Poland,Portugal,Saudi Arabia,Singapore,South Africa Spain,Sweden,Switzerland,Taiwan,Thailand,United Arab Emirates,Finland,United Kingdom.













Google,Yahoo,Microsoft,Facebook,Twitter பற்றி கூகுள் என்ன நினைக்கின்றது ?



நாம் கூகுளில் தேடும் வார்த்தைகளை கொண்டு ,கூகுள் Auto Suggest எனும்
முறைமூலம் ,உங்கள் keyword-ஐ பொறுத்து சில வார்த்தைகளை பரிந்துரைக்கும்.
உதாரணமாக நீங்கள் Google is என்று டைப் செய்தால்,சில வார்த்தைகளை பரிந்துரைக்கும்.அப்படி சில இணையதளங்களை பற்றி கூகுள் என்ன நினைக்கிறது என்று தேடும்போது கிடைத்த சில ருசிகர தகவல்கள்...


1.Google


2.Yahoo

3.Microsoft
4.Facebook



5.Twitter

ஆலூ டஹாரி(aaloo tahari)

தேவையான பொருட்கள்:
========================

அரிசி - ஒண்ணேகால் கப்
உருளை கிழங்கு - மூன்று
பச்சை பட்டாணி - கால் கப்
இஞ்சி - ஒரு இன்ச் துண்டு
பூண்டு - மூன்று பல்
சீரகம் - அரை டீஸ்பூன்
கிராம்பு - ஒன்று
கருப்பு ஏலக்காய் - ஒன்று
பட்டை - ஒன்று
பிரியாணி இலை - ஒன்று
பூண்டு பொடி - கால் டீஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன்
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - எழு
பெரிய வெங்காயம் - ஒன்று
எண்ணெய் - ஐந்து டேபிள்ஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப

செய்முறை:
===========

* அரிசியை குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

* வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.தக்காளி துண்டுகளாக்கி கொள்ளவும்.

* உருளை கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி கொள்ளவும்.

* எண்ணையை சூடேற்றி நருக்கிய வெங்காயம்,பூண்டு சேர்த்து மிதமான தணலில் ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

* இஞ்சி,பூண்டு பொடி,மஞ்சள் பொடி,மிளகாய் பொடி,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரியாணி இலை,சீரகம்,பச்சை மிளகாய்,தக்காளி மற்றும் உப்பு சேர்த்து அரை கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

* எல்லாம் ஒன்று சேர்ந்து தக்காளி மசியும் வரை கொதிக்க வைக்கவும்.

* உருளை கிழங்கு ,பட்டாணி சேர்த்து ஒரு கப் நீர் சேர்த்து கொதிக்க ஆரமித்ததும் ஊறவைத்த அரிசியை சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து உதிராக வடித்து எடுக்கவும்.


* சுவையான ஆலூ டஹாரி தயார்.

இதனை குருமாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

உங்கள் LapTop,Cellphone,Digital Camera பேட்டரிகளை நீடித்து உழைக்கச் செய்வது எப்படி?


நம் வாழ்க்கையில டிஜிட்டல் சாதனங்களின் பங்கு இன்றியமையாதது.அவற்றில் பல மின்கலம் (Battery) மூலமே இயங்குகின்றது.மின்னேற்றி மூலம் மின்கலத்தின் சக்தியை தினமும் கூட்டுவோம்.ஆனால் எந்நேரமும் மின்னேற்றி (Charger) வைத்திருப்போம் என்று கூற முடியாது.மின்னேற்றி வைத்திருந்தாலும் அதை பயன்படுத்த முடியாத நிலை வரலாம். இது போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு நேர்ந்தால் எப்படி சமாளிப்பது ?

நாம் பயன்படுத்தும் மின்கல சாதனங்களை எப்படி ஆற்றல்மிக்கதாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

வெப்பத்தை தவிருங்கள் :
நீங்கள் எந்த வகை மின்கல சாதனங்களை பயன்படுத்தினாலும் அதை தேவை படும்போது மட்டுமே அதனை உறைகளில் இருந்து வெளியே எடுங்கள்.மற்ற நேரங்களில் அதை பாதுகாப்பாக அதற்கான உறையிலே வைத்திருங்கள்.
வெப்பம்தான் மின்கலத்தின் முதல் எதிரி , நீங்கள் மடிக்கணினியை பயன்படுத்தாமல் வெளிய வைத்திருந்தால்,வெளிவெப்பம் ஊடுருவி மின்கலத்தில் வேதியல் மாற்றங்கள் நிகழும்.இதனால் மின்கலத்தின் சக்தி வீணாகும். நீங்கள் மின்கலத்தை குளுமையாக வைத்திருந்தால் ,மின்கலம் நீடித்து உழைக்கும்.நினைவில் கொள்ளுங்கள் .

பயன்படுத்தாத சிறப்பு அம்சங்களை நிறுத்துங்கள் :
மடிக்கணினி : (LapTop)
BlurTooth,Wi-Fi போன்றவை சிறப்பான அம்சங்கள்தான் உங்கள் கணினிக்கு.ஆனால் இவை அதிகமான சக்தியை பயன்படுத்துகின்றன . தேவை இல்லாத நேரத்தில் இவற்றை நிறுத்தி வையுங்கள். இதனால் மின்கலத்தின் சக்தியை சேமிக்கலாம்.திரையின் செறிவையும் (Intensity) குறையுங்கள்.மேலும் DVD Drive மற்றும் USB Flash Drive ஆகியவற்றை பயன்படுத்தவில்லை என்றால்,அவற்றை முதலில் அகற்றுங்கள்.

அலைபேசி : (CellPhone)
திரையின் செறிவை நிறுத்துங்கள் அல்லது குறையுங்கள்.
எண்ணியல் படக்கருவி : (Digital Camera)
மின்கலத்தின் சக்தி குறைவாக இருக்கும்போது ,எடுக்க போகும் படத்தின் முன்னோட்டம் பார்க்க உதவும் LCD திரை வசதியை நிறுத்தி விடுங்கள்.மேலும் மின் விளக்கை(Flash) நிறுத்தி விடலாம் இது மேலும் பல படங்கள் எடுக்க உதவும்.

வன்தட்டை வாட்டதீர்கள் :
உங்கள் மடிக்கணினியில் அடிக்கடி வன்தட்டை வதைக்காதீர்கள்.வேண்டிய மட்டுமே பயன்படுத்துங்கள்.நீங்கள் Ipod அல்லது Mp3 player போன்ற சாதனங்கள் பயன்படுத்தினாலும் இது பொருந்தும்.ஒரு பாடலை next,previous மற்றும் shuffle போன்றவற்றில் மாற்றுவதற்கும் ப்ளய்ளிச்த் பயன்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.Playlist நிறைய சக்தியை சேமிக்கும்.
சும்மா சும்மா ஆப் பண்ணாதீங்க:
நீங்கள் laptop,cellphone அல்லது Digital camera எதை பயன்படுத்தினாலும் .அதை அடிக்கடி ஆப் செய்து ஆன் செய்யாதீர்கள்.நாம் செல்போனை அவ்வளவாக ஆப்-ஆன் செய்யமாட்டோம். ஆனால் செல்போனில் கூட Offline அல்லது Airplane போன்றவற்றை தேர்ந்தெடுக்கலாம் . மடிக்கணினியில் நிறைய பேர் செய்யும் தவறு இதுதான்.நீங்கள் ஒருதடவை ஆப் செய்து ஆன் செய்யும் போது,நிறைய மின்கல சக்தி வீணாகின்றது.இதற்கு பதில் Hiberanate தேர்ந்தெடுங்கள்.

ஒவ்வொரு புகைப்படம் எடுத்த பிறகும் உங்கள் காமெராவை ஆப் செய்து விடாதீர்கள்.அதற்கு பதில் LCD திரையை ஆப் செய்து ஆன் செய்யுங்கள்.
இது போன்ற சின்ன சின்ன மின்கல சக்தியை சேமிக்கும் முறைகளை செய்து,
நமது மின்கலத்தை நீடித்து உழைக்க வைக்கலாம்.