
Change Windows Xp Taskbar like Windows 7.
உங்கள் பழைய Windows Xp Taskbar:
உங்கள் புதிய விண்டோஸ் Xp Taskbar ,விண்டோஸ் 7 Taskbar போல் :
Google Fast Flip - செய்திகளை வேகமாக படிக்க...

இதனால் என்ன பயன்?இனி நீங்கள் உலகச் செய்திகளை படிக்க எங்கும் அலைய தேவை இல்லை.அத்தனை செய்திகளையும் அதி வேகமாக பாஸ்ட் ப்லிப் வழங்குகிறது.
எனென்ன செய்திகள் படிக்கலாம் ?அரசியல்,வணிகம்,விளையாட்டு,உலகம்,அமெரிக்கா,உடல்நலம்,தொழில்நுட்பம்,
பொழுதுபோக்கு,பயணம் இப்படி பலபல செய்திகள் உடனுக்குடன்.
ஏன் கூகுள் ப்லிப் :
- நீங்கள் செய்திப் பக்கங்கள் தரவிறக்க காத்திருக்க தேவையில்லை.
- விரும்பினால் மட்டுமே , விவரமாக படிக்கலாம்.
- இதன் அசத்தலான வேகம்.
- இதன் பக்கங்கள் முழுக்க Tab மற்றும் Flip முறையில் இயங்குகிறது.
இதன் சுட்டி Google FastFlip
Google's Sidewiki -- Picasa 3.5 -- Airtel to Vodafone -- Cricket

அட என்னங்க இது என்கிறீர்களா ?
ஒரு வலைத்தளத்திற்கு நாம் செல்வோமேயானால் ,அத்தளத்தை பற்றி கருத்துக்களை அவர்கள் தளத்தில் தான் பதிவு செய்ய முடியும்.ஆனால் sidewiki மூலம் நாம் எந்த தளத்தை பற்றியும் நம் கருத்தை பதிவு செய்ய முடியும்.

ஒரு வலைத்தளத்தை பற்றி மற்றவர்களின் கருத்தை தெரிந்து கொள்வதன் மூலம்,அத்தளத்தை பற்றி உண்மையான தகவல் நமக்கு கிடைக்கின்றது.மேலும் நமக்கு வேண்டிய விடயம் தளத்தில் கிடைக்குமா இல்லையா என்பதும்தெரியவருகின்றது.அதனுடைய நம்பகத்தன்மை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நம் கருத்தை எப்படி பதிவு செய்வது ?Google Sidewiki என்ற முகவரிக்கு சென்று ,உங்கள் FireFox அல்லது Internet Explorer உடன் இணைத்து கொள்ளுங்கள்.
http://www.google.com/sidewikiPicasa 3.5

இலவசமாக நமது புகைபடங்களை எடிட் செய்ய உதவும் மென்பொருளான பிகாசா,அதன் அடுத்த பதிவான பிகாசா 3.5 அறிமுகபடுத்தியுள்ளது.இதன் தரவிறக்க சுட்டி Picasa 3.5.இதற்கு தேவையான இயங்குதளம் விண்டோஸ் XP/VISTA/7.
http://picasa.google.com/உங்கள் செல்போன் வழங்கிகளை மாற்றலாம் நம்பரை மாற்றாமலே:
இனி நாம் எந்த செல்போன் வழங்கிகளையும் நம்பரை மாற்றாமல் இருப்பதற்காக சகித்து கொண்டு இருக்கத் தேவையில்லை.பிடிக்கவில்லை என்றால் வேறு ஒன்றை மாற்றி கொள்ளலாம்.
இதோ ,அதோ என தப்பித்து வந்த செல்போன் வழங்கிகள்,இனி நம்மை ஏமாற்ற முடியாது.இரண்டு முறை காலக்கெடுவை தவறியவர்கள் இம்முறை ,கண்டிப்பாக இத்திட்டத்தை செயல் படுத்த வேண்டுமென மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
வரும் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் பெருநகரங்களில் திட்டம் அமலுக்கு வருகின்றது. 2010 ,மார்ச் 20 ஆம் தேதி முதல் நாடெங்கிலும் அமலுக்கு வருகின்றது.Airtel வேண்டாமா,Vodafone இருக்குது அதுவும் வேண்டாமா Aircel, இல்லை டோகோமோ ,இல்லை ரிலையன்ஸ் இல்லை bsnl.
FireFox-ல் Password-களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வது எப்படி?

Firefox உள்ள பல வசதிகள் நாம் அறிந்ததே.இதில் கடவுச்சொல்லை சேமிக்கும் வசதி மிகவும் பயனுள்ளதாகும்.இதை பற்றி தெரியாதவர்கள் இங்கே அழுத்தவும். இதில் நாம் பல வலைத்தளங்களின் கடவுச்சொற்களை சேமித்து வைத்து இருப்போம்.ஆனால் எல்லா கடவுச்சொற்களையும் நினைவில் வைத்து கொள்ள முடியாது.
நான் அண்மையில் இயங்குதளத்தை நீக்கிவிட்டு மறுபடி பதியும்போது ,Firefox-ல் சேமித்து வைத்துள்ள கடவுச்சொற்களை எப்படி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வது என்று தெரியவில்லை.இதற்கு எதாவது வசதிகள் உள்ளதா என்று இணையத்தில் தேடும் போது கிடைத்ததுதான் Password Exporter 1.2 என்ற அற்புதமான நீட்சி.இதை நிறுவினால் போதும் நாம் சுலபமாக கடவுச்சொற்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்து கொள்ளலாம்.நீங்கள் கடவுச்சொற்களை Crypt செய்து ஏற்றுமதி செய்யலாம்.இந்த நீட்சி மிகவும் பயன் உள்ளதாகும்.
இவ்வற்றை மாதம் ஒரு முறை பேக்கப் செய்து வைத்து விட்டால், நாம் பயன்படுத்தும் இயங்குதளம்(OS) பழுதுஅடையும்போது அல்லது FireFox -இல் பிரச்னை என்றால் நமது கடவுச்சொற்கள் அனைத்தையும் இழக்கத் தேவையில்லை.கீழ்கண்ட எளிய முறையை பயன்பற்றி நீங்கள் கடவுச்சொற்களை சேமிக்கலாம்.
படி 1:
இந்த நீட்சியை Firefox-உடன் இணைக்க இங்கே அழுத்தவும் "Password Exporter 1.2"
படி 2:FireFox-ஐ restart செய்தபின்,Tools-->options-->Security செல்லவும்.Import/Export Passwords என்ற பட்டனை அழுத்தவும்...
படி 3:
உங்கள் தேவைக்கேற்ப Export Passwords அல்லது Import Passwords அழுத்தவும். XML அல்லது CSV கோப்புகளாக கடவுச்சொற்களை சேமிக்கலாம்.உங்கள் கடவுச்சொற்களை யாரும் பார்த்து புரிந்து கொள்ள முடியாதபடி க்ரிப்டிங் செய்து ஏற்றுமதி செய்ய Obfuscate UserNames/passwords என்ற Checkbox-ஐ தேர்வு செய்திடுங்கள்.இதே முறையை பயன்பற்றி நீங்கள் இறக்குமதியும் செய்திடலாம்.


அவ்வளவுதான்.Have Fun :)
கோப்புகளை Recover,Delete செய்வதற்கு இலவச மென்பொருள்கள்...

பல மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தாலும்,அத்தனையும் பாதுகாப்பானது என்று கூற முடியாது.அவற்றில் பல கணினிகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிரல்களான Virus(நச்சுநிரல்) , Spyware(உளவுநிரல்) மற்றும் Malware(தீங்குநிரல்) கொண்டிருக்கும்.அதனால் , இலவச மென்பொருள்களை தரவிறக்கும் முன் அவற்றின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை போன்றவற்றில் கவனம் கொள்ள வேண்டும். இலவச மென்பொருள்களை நமக்களிக்கும் நிறுவனங்களுக்கு முதலில் நன்றி சொல்வோம்.

1.Recover Deleted Files :
வேண்டிய கோப்புகளை(File) தெரியாமல் அழித்து விட்டால் ,அவற்றை மீட்டெடுக்க உதவும் மென்பொருள்.நன்றாக வேலை செய்கின்றது.
2.Permanently Delete Files :
கோப்புகளை நிரந்திரமாக அழிக்க உதவும் மென்பொருள்.ஒரு முறை இம்மென்பொருளை
கொண்டு அழித்துவிட்டால் மீண்டும் கோப்புகளை மீட்டெடுக்க முடியாது
Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0
வணக்கம் நண்பர்களே,
துண்டாக்கல் (Fragmentation) என்றால் என்ன ?
வன்தட்டில் கோப்புகளை சேமிக்கும் போது,கோப்புகள் ஒரே இடத்தில் சேமிக்கபடுவதில்லை.வன்தட்டில் காலியாக உள்ள இடத்தில்,கோப்புகள் துண்டு துண்டாக பிரிக்கப்பட்டு சேமிக்கப்படும்.எந்த வகை கோப்புகள் ஆனாலும் ,அதன் அளவு எவ்வளவு பெரிதாயினும் இவ்வாறே சேமிக்கப்படும்.
ஏன் Defragmentation செய்ய வேண்டும் ?
வன்தட்டில் சேமித்த கோப்புகளை ,நாம் பயன்படுத்தும்போது ,கணினி ஆங்காங்கே
சேமிக்கபட்ட துண்டுகளை ஒன்றாக்கி கோப்புகளாக தரும். சிறிய கோப்புகளாக இருந்தால் ,கணினியினின் வேகம் குறைவது நமக்கு தெரிவதில்லை.இதுவே சற்று பெரிய கோப்புகளாக இருந்தால் ,அதனை ஒரு முழுமையான கோப்பாக மாற்ற கணினி நீண்ட நேரம் எடுத்து கொள்ளும்.இப்பிரச்சனை நம்மில் பலருக்கு உண்டு.
எப்படி Defragmentation செய்வது ?
இப்படி ஒவ்வொரு முறையும் நமது நேரத்தையும் ,கணினியின் ஆற்றலை குறைக்கும் இப்பிரச்சனைக்கு Defragemnt செய்வதுதான் ஒரே வழி.
Goto My Computer .Right Click -> Manage -> Disk Defragmenter
இந்த முறையில் நமது வன்தட்டில் பிரிக்கபட்ட பிரிவுகளான (C,D,E etc.,) போன்றவற்றை defragment செய்ய இயலும் .ஆனால் ஒரு File அல்லது Folder இதில் Defragment செய்ய முடியாது.
Power Defragmenter 3.0 :(Portable)
நமது கணினியின் வன்தட்டை Defragment செய்ய சிறந்த இலவசமான மென்மொருள் தான் Power Defragmenter 3.0. இதன் மூலம் நாம் ஒரு File அல்லது Folder defragment செய்து கொள்ளலாம் .மிகவும் இலகுவான மென்பொருளான இது பயன்படுவதற்கும் எளியது.
இது மைக்ரோசாப்டின் Config என்னும் மென்பொருளை அடிபடையாக கொண்டு இயங்குகின்றது.இதனை கணினியில் பதிய வேண்டிய அவசியம் இல்லை.
தரவிறக்கி PowerDefragmenter.exe டபுள் கிளிக் செய்தால் கீழ்கண்டவாறு காண்பிக்கும்.இங்கே
Yes கிளிக் செய்யவும்.
இப்போது மைக்ரோசாப்டின் CONFIG மென்பொருளை அது தானாகவே தரவிறக்கம் செய்து கொள்ளும் .
இப்போது நாம் மென்பொருளை பயன்படுத்த தயார்.Next கிளிக் செய்யவும்
உங்களுக்கு வேண்டியவற்றை தேர்வு செய்யலாம்.
Files:
Folders:
Google - புத்தகங்களும் இனி இலவசம் ...

http://books.google.com மூலம் புத்தககங்களை தேட,படிக்க
மற்றும் வாங்கும் வசதியை இலவசமாக வழங்கி வந்த கூகுள்,
இனி புத்தகங்களும் இலவசமாக கொடுக்க போகின்றது.
இப்புத்தகங்களை Public Domain மூலம் இலவசமாக
தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.நீங்கள் PDF அல்லது
EPUB Format-ல் தரவிறக்கலாம்.

உதாரணமாக William Shakespeare-இன் படைப்பான
Hamlet இலவசமாக கொடுக்கின்றது.தரவிறக்க
இங்கே சொடுக்குங்கள்.
மேலும் 10 லட்சம் புத்தகங்கள் படிக்கவும்,தரவிறக்கவும்
காத்திருக்கின்றன உங்களுக்காக ... விரையுங்கள்Google Books
Hotmail முகவரிக்கு Gmail,Yahoomail ஆகியவற்றை இறக்குமதி செய்வது எப்படி?

Gmail முகவரிக்கு Yahoomail, Hotmail, AOLmail ஆகியவற்றை இறக்குமதி செய்வது எப்படி - என்ற தொடரின் குறுக்கு பதிவுதான் இது .முதல் பாகத்தை படிக்க கீழே அழுத்தவும்.
Gmail முகவரிக்கு Yahoomail, Hotmail, AOLmail
ஆகியவற்றை இறக்குமதி செய்வது எப்படி - பாகம் 1
இங்கே ஹாட்மெயில் கணக்குக்கு எப்படி உங்கள் ஜிமெயில் மற்றும் யாஹூ மெயில் கணக்குகளை இறக்குமதி செய்வது என்று பார்ப்போம்.
ஜிமெயில் போல் ஹாட்மெய்லின் உள்ளே இதற்கான வசதி கிடையாது.ஆனாலும் அதுTrueSwitch மூலம் அதற்கான வசதியை நமக்களிகின்றது.ஹாட்மெயில் கணக்குக்கு மற்ற கணக்குகளை மாற்ற இங்கே சொடுக்கவும் .TrueSwitch For HotMail

படி1 :
இங்கே நீங்கள் ஜிமெயில் அல்லது யாஹூ மெயில் முகவரியை கொடுக்கவும்.அடுத்த கட்டத்தில் உங்கள் ஹாட்மெயில் முகவரியை கொடுத்து Continue பட்டனை அழுத்தவும் .

உங்கள் ஜிமெயில் அல்லது யாஹூ மெயில் கணக்கில் இருந்து எதையெல்லாம் இறக்குமதி செய்திட வேண்டும் என்பதனை தேர்வு செய்யுங்கள்.தேர்வு செய்தபின் Submit பட்டனை அழுத்தவும்.

படி3 :
அவ்வளவுதான்:). உங்கள் ஹாட்மெயில் கணக்கில் நீங்கள் மேலே தேர்வு செய்தஅத்தனையும்24 மணி நேரத்திற்குள்ளாக இறக்குமதி செய்யப்பட்டுவிடும்.Have Fun :)

Gmail முகவரிக்கு Yahoomail, Hotmail, AOLmail ஆகியவற்றை இறக்குமதி செய்வது எப்படி -பாகம்இரண்டின் முதல் படியே இப்பதிவுதான்.பாகம் இரண்டில் நான் எழுதவிருப்பது Yahoomail to Gmailபற்றி.நன்றி...
(FireWall) :
நீங்கள் கணினியை முதன் முதல் இணையத்தில் இணைக்கும் முன் தீச்சுவரை கவனியுங்கள்.அணைத்து வைக்கபட்டிருந்தால் மீண்டும் அதன் சேவையை தொடங்கி வையுங்கள்.இது நமது பிணையத்தில் இருக்கும் மற்ற கணினிகலடமிருந்து எந்த தீங்குநிரல்களும் வராமல் பாதுகாக்கும்.நீங்கள் வாங்கிய மேசைக் கணினி அல்லது மடிக் கணினியில் விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் XP2 இயங்குதளங்கள் பதியபட்டிருந்தால், தீச்சுவர் கோட நிலையில் தொடங்கப்பட்டிருக்கும்.இதை எங்கே சென்று உறுதி செய்வது?
Start -> Settings -> Control Panel -> Security Center -> Firewall Settings
கீழே படத்தில் காட்டபட்டுள்ளதை போல் தேர்வு செய்திடுங்கள்...

இயங்குதளத்தை புதுப்பித்தல்:நீங்கள் புதியதாய் கணினி வாங்கி இருந்தாலும்,அதனுள் இருக்கும் இயங்குதளம் முழுமையாக புதிப்பிக்கபட்டிருக்காது. இதனை புதுப்பித்தல் மிக அவசியமான ஒன்றாகும்.இது கணினியின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கின்றது.நீங்கள் புதுப்பித்தலை தானாக இயங்குமாறு அமைத்தல் அவசியம்.
Settings -> Control Panel -> Security Center -> Automatic Updates
கீழே படத்தில் காட்டபட்டுள்ளதை போல் தேர்வு செய்திடுங்கள். அதாவது தினமும் அதிகாலை மூன்று மணிக்கு உங்கள் கணினி புதுப்பிக்கப்படும்.

பாதுகாப்பு மென்பொருளை நிறுவுங்கள் :
தீச்சுவர் இயங்குகின்றது,கணினி தினமும் புதிப்பிக்கபடுகின்றது அப்புறம் ஏன் பாதுகாப்பு மென்பொருள் ? விண்டோஸ் இயங்குதளமானது , எந்தவித நிரலும் செயல்புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டது.அதனால் விண்டோசை தாக்கும் நச்சுநிரல்களும் ,தீங்கு நிரல்களும் மிக அதிகம்.தீசுவற்றால் இவற்றை தடுக்க முடியாது .இதற்கு நமக்கு தேவை நச்சுஎதிர்ப்பிகள்(AntiVirus).இவற்றில் பல இலவசமாக கிடைக்கின்றன. சிலவற்றின் சுட்டிகள் கீழே...
இவற்றை கணினியில் நிறுவவுதான் மூலம் போதிய பாதுகாப்பு கிடைக்கின்றது .மேலும் நீங்கள் இணையத்தில் ,பலவிதமான தளங்களுக்கு செல்லும்போது விழிப்புடன் இருப்பது அவசியம்.தேவையற்ற சுட்டிகளை சொடுக்குவது போன்றவற்றை தவிர்க்கலாம்.உங்கள் இணைய உலாவியும் புதிப்பிக்கபடுவது அவசியம்.இப்படி சிலபல விடயங்களை தவறாமல்
உங்களுடைய Twitter Tweets இப்போது ரீடரில் படிக்கலாம் - எப்படி?

என்ற இணையதளம் நமக்கு இலவசமாக தருகின்றது.ஒரு முறை பதிவு செய்து கொண்டால் போதும்.கீழ்கண்ட எளிய முறையை பின்பற்றி நீங்களும் சுலபமாக பயன் பெறலாம்.

படி 1:www.readtwit.com என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.Get Fed என்றபட்டனைசொடுக்குங்கள்.

உங்கள் Twitter கணக்குடன் லாகின் செய்யுங்கள்.

உங்களுக்கு வேண்டிய ரீடரை தேர்வு செய்யுங்கள்.அவ்வளவுதான் Have Fun :)

Firefox's New King Tab - அசத்தலான புதிய டேப் வசதி

இந்த நீட்சியை உங்கள் FireFox உடன் உடன் இணைக்க இங்கே அழுத்தவும்.
இணைத்தபின் Restart செய்து New tab செல்லுங்கள்.உங்கள் விருப்பதிற்கேற்ப மாற்ற வலது மேல்பக்க மூலையில் உள்ள Options பட்டனை சொடுக்குங்கள்.

1.ShortCuts
நீங்கள் எதற்கு வேண்டுமானாலும் ShortCut உருவாக்கலாம்.ஒரு இணையதளத்திற்கோ இல்லை உங்கள் கணினியில் பதிந்துள்ள ஏதேனும் ஒரு மென்பொருளுக்கோ கொடுக்கலாம்.(Notepad,Skype,Media Player etc)

2.Most Used Sites
நாம் அதிகம் பார்த்த இணையதளங்கள் வரிசைபடுதபட்டிருக்கும்
3.Recently Closed Tabs
நாம் அண்மையில் மூடிய டேப்களை பார்க்கலாம்

நாம் இணையத்தில் உலவுவதை பொறுத்து சில தளங்கள் பரிந்துரைக்கப்படும்.
5.BackGround
நாம் விரும்பிய படங்களை பின்புலமாக தேர்தெடுக்கலாம்.

Blogger-ன் மேம்படுத்தப்பட்ட எடிட்டர் - Blog Tips 1
தமிழில் பதிவுகள் எழுதும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.மேலும் பல நண்பர்கள் இனிய தமிழில் பதிவு எழுத முன்வர வேண்டும் .மேலும் பல புதுமையான படைப்புக்கள் படைத்து இணையத்திலும், தமிழினை இனிக்கச் செய்வோம்.
வலைபதிவர்களுக்கான சிறு சிறு குறிப்புகளை இந்த தொடர் பதிவில் எழுதுகிறேன்.பதிவு எழுதும் நண்பர்களுக்கு பயன் தரும் என்று நம்புகிறேன்.உங்களுக்கு பதிவில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தயங்காமல் கேளுங்கள்.முடிந்தவரை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.நன்றி.
தினம் தினம் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும் கூகுளின் மற்றுமோர் சேவை,Blogger-இன் மேம்படுத்தப்பட்ட எடிட்டர்.
இந்த சேவையை பெற :
- உங்கள் பிளாக்கர் கணக்கில் உள் நுழையுங்கள்.
- Settings கிளிக் செய்யுங்கள்.கீழ்கண்டவாறு தேர்வு செய்யுங்கள்.
மேம்படுத்தப்பட்ட எடிட்டரின் புதிய வசதிகள்:
1.Preview: நீங்கள் இப்போது வலைத்தளத்தில் எப்படி உங்கள் பதிவு தோன்றுமோ.. அப்படியே பார்க்கலாம்.
2.Increase Height :எடிட்டரின் உயரத்தை அதிகபடுத்தலாம்.எடிட்டரின் கீழ் வலது மூலையில் மௌசால் இழுத்து உயரத்தை கூட்டலாம்.அகலத்தை கூட்ட முடியாது.
3.Post Options : பழைய எடிட்டரில் ,நீங்கள் பதிவை எழுத ஆரம்பித்த நேரமே பதிவிடும் போதும் தெரியும்.அதை நாம்தான் மாற்ற வேண்டும் .இது மாற்றி அமைக்கபட்டுள்ளது.
4.அழகிய டூல்பார்:
5.Add muliple Images :
இப்போது பதிவிற்கு வேண்டிய படங்களை அனைத்தையும் தேர்வு செய்து விட்டு .வேண்டிய இடத்தில் இடம் பெறச் செய்யலாம். 6.Image Bubble:படங்களை அளவினை இங்கேயே மாற்றலாம்.படத்தினை டபுள் கிளிக் செய்தால் போதும் ,வேண்டிய அளவினை தேர்வு செய்யலாம்.
Gmail மின்னஞ்சலில் படங்களை (Inline) நேரிடையாக இணைப்பது எப்படி ?
வணக்கம் நண்பர்களே, மின்னஞ்சல் சேவையில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது ஜிமெயில் .கூடிய விரைவில் எல்லா மின்னஞ்சல் சேவையையும் விட அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும். ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் இந்த அசுர வளர்ச்சி.இதன் முக்கிய அம்சம் எளிமை .எளிமையை தவிர வேறொன்றுமில்லை. ஜிமெயில் லேப்ஸ் மூலம் பல புதிய வசதிகளை கொடுக்கின்றது.அதில் ஒரு முக்கியமான சேவைதான் படங்களை மின்னஞ்சலுடன் இணைப்பது.பல பேருக்கு இந்த வசதி இருப்பது தெரியாது.மிகவும் பயனுள்ள வசதி இனி படங்களை Outlook போன்றவற்றை கொண்டு இணைக்காமல் நேரிடியாகவே இணைக்கலாம்.இனி Attachments தேவையில்லை.
இந்த வசதியை பெற : உங்கள் ஜிமெயில் கணக்கில் உள் நுழையுங்கள்.வலது மூலையில் உள்ள பச்சை குடுவை போல் உள்ள சிறிய படத்தினை கிளிக் செய்யுங்கள்.அல்லது Settings -> Labs தேர்வு செய்யுங்கள். அவ்வளவுதான். Have Fun :)
Inserting Images என்பதனை தேடி கீழே படத்தில் உள்ளது போல் தேர்வு செய்யுங்கள்.
இனி நீங்கள் புதிய மின்னஞ்சலை உருவாக்கும்போது ,படங்களை இணைக்க இந்த பட்டனை சொடுக்கினால் போதும்.
வணக்கம் நண்பர்களே,
மின்னஞ்சல் சேவையில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது ஜிமெயில் .கூடிய விரைவில் எல்லா மின்னஞ்சல் சேவையையும் விட அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும். ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் இந்த அசுர வளர்ச்சி.இதன் முக்கிய அம்சம் எளிமை .எளிமையை தவிர வேறொன்றுமில்லை. ஜிமெயில் லேப்ஸ் மூலம் பல புதிய வசதிகளை கொடுக்கின்றது.அதில் ஒரு முக்கியமான சேவைதான் படங்களை மின்னஞ்சலுடன் இணைப்பது.பல பேருக்கு இந்த வசதி இருப்பது தெரியாது.மிகவும் பயனுள்ள வசதி இனி படங்களை Outlook போன்றவற்றை கொண்டு இணைக்காமல் நேரிடியாகவே இணைக்கலாம்.இனி Attachments தேவையில்லை.
இந்த வசதியை பெற :
உங்கள் ஜிமெயில் கணக்கில் உள் நுழையுங்கள்.வலது மூலையில் உள்ள பச்சை குடுவை போல் உள்ள சிறிய படத்தினை கிளிக் செய்யுங்கள்.அல்லது Settings -> Labs தேர்வு செய்யுங்கள். அவ்வளவுதான். Have Fun :)
Inserting Images என்பதனை தேடி கீழே படத்தில் உள்ளது போல் தேர்வு செய்யுங்கள்.
இனி நீங்கள் புதிய மின்னஞ்சலை உருவாக்கும்போது ,படங்களை இணைக்க இந்த பட்டனை சொடுக்கினால் போதும்.
MicroSoft's RichCopy - கோப்புகளை வேகமாக பிரதி எடுக்க இலவச மென்பொருள்
வணக்கம் நண்பர்களே,
நமது கோப்புகளை நகலாக்கி சேமிக்க விண்டோசில் கோடா நிலையில் உள்ள Ctrl + C மற்றும் Ctrl + V பயன்படுத்துவோம்.இது நமது கணினியில் உள்ள கோப்புகளை பிரதி எடுக்க உதவுகின்றது.இதுவே பிணையத்தில் உள்ள மற்ற கணினிகளில் இருந்து பிரதி எடுக்கும்போது இது மிகவும் மந்தமாக செயல்படும்.நமது பிணையத்தில் எதாவது பிரச்னை என்றால்இன்னும் நிலைமை சிக்கலாகிவிடும்.இந்த மாதிரி சமயங்களில் நமக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்ட மென்பொருள்தான் MicroSoft's RichCopy. இது ஒரு இலவச மென்பொருள்.இதை ஏனோ மைக்ரோசாப்ட் தனது இயங்குதளங்களில் இந்த வசதியை இணைக்கவில்லை. கோப்புகளை பிரதி எடுக்க ஒரு சிறந்த மென்பொருளான இதனை எப்படி நமது கணினியில் தரவிறக்கி நிறுவுவது எப்படி என்று கீழே படங்களுடன் விளக்கி உள்ளேன்.
இது ஒரு Self Extractor. இதனை தரவிறக்கிய பின்,டபுள் கிளிக் செய்து சேமியுங்கள்.
உங்களுக்கு வேண்டிய இடத்தில் கோப்புகளை சேமியுங்கள்.
இப்போது அந்த உறையில் (Folder) நுழைந்து ,setup.exe என்பதனை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான் RichCopy-ஐ கணினியில் பதிந்து விட்டீர்கள்.இப்போது அதனை எப்படி பயன்படுத்துவது என்று பார்போம் .
அதன் முகப்பு :
பிரதி எடுக்க வேண்டிய கோப்பின் மூலத்தையும் ,பிரதி எடுக்க படவேண்டிய இடத்தையும் தேர்வு செய்யுங்கள்.
தேர்வு செய்த பின் Start Copy என்ற பட்டனை சொடுக்குங்கள்.
கோப்புகள் பிரதி எடுக்கப்படுகின்றது:
பிரதி எடுப்பது நிறைவடைந்தது :
விரும்பியவற்றை தேர்ந்தெடுக்க Option என்பதனை சொடுக்குங்கள்.
Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள்
வணக்கம் நண்பர்களே,
இலவச மென்பொருள்களில் மிகவும் பாதுக்காப்பான,இலகுவான மற்றும் எளிமையான, நன்றாக வேலைசெய்யக்கூடிய பல பயனுள்ள மென்பொருள்களை இணையத்தில் பார்த்து, பயன்படுத்தியதை இங்கே உங்களுக்கு அறிமுகம் செய்து வருகிறேன்.
அவ்வரிசையில் மேலும் ஒரு சிறப்பான இலவச மென்பொருள்தான் Gsplit 3.0. பெரிய கோப்புகளை , சிறு சிறு துண்டுகளாக பிரிக்க உதவுகின்றது.
இதற்கு முன் ,Winrar பயன்படுத்தி பெரிய கோப்புகளை ,சிறு துண்டுகளாக பிரித்து வந்தேன்.சிறிய கோப்புகளை பிரிக்கும்போது எந்த பிரச்னையும் இல்லை.ஆனால் ஒருசமயம் 3GB உள்ள கோப்பினை பிரிக்கும்படி வந்தது,அப்போது Winrar எடுத்து கொண்ட நேரம் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல்...அதே கோப்பினை பிரிக்க Gsplit எடுத்துக்கொண்ட நேரம் 90 நொடிகள் மட்டுமே. ஏறக்குறைய 50 மடங்கு வேகமாக Gsplit செயல்படுகின்றது.(Winrar -ஐ விட).இந்த இலவச மென்பொருளை நிறுவத் தேவை இல்லை.உங்களுக்கு வேண்டியவாறு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இலவச மென்பொருள்களில் மிகவும் பாதுக்காப்பான,இலகுவான மற்றும் எளிமையான, நன்றாக வேலைசெய்யக்கூடிய பல பயனுள்ள மென்பொருள்களை இணையத்தில் பார்த்து, பயன்படுத்தியதை இங்கே உங்களுக்கு அறிமுகம் செய்து வருகிறேன்.
அவ்வரிசையில் மேலும் ஒரு சிறப்பான இலவச மென்பொருள்தான் Gsplit 3.0. பெரிய கோப்புகளை , சிறு சிறு துண்டுகளாக பிரிக்க உதவுகின்றது.
இதற்கு முன் ,Winrar பயன்படுத்தி பெரிய கோப்புகளை ,சிறு துண்டுகளாக பிரித்து வந்தேன்.சிறிய கோப்புகளை பிரிக்கும்போது எந்த பிரச்னையும் இல்லை.ஆனால் ஒருசமயம் 3GB உள்ள கோப்பினை பிரிக்கும்படி வந்தது,அப்போது Winrar எடுத்து கொண்ட நேரம் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல்...அதே கோப்பினை பிரிக்க Gsplit எடுத்துக்கொண்ட நேரம் 90 நொடிகள் மட்டுமே. ஏறக்குறைய 50 மடங்கு வேகமாக Gsplit செயல்படுகின்றது.(Winrar -ஐ விட).இந்த இலவச மென்பொருளை நிறுவத் தேவை இல்லை.உங்களுக்கு வேண்டியவாறு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மென்பொருளை தரவிறக்கி Unzip செய்து கொள்ளுங்கள்.இந்த மென்பொருளை எப்படி பயன்படுத்துவது என்று விளக்கி உள்ளேன். பிரித்த கோப்பினை இணைக்க அதிலயே ஒரு .exe உருவாக்கப்படும்.அதை கிளிக் செய்தால் போதும் ,மீண்டும் பிரித்த கோப்புகள் தானாகவே இணைந்து விடும் .
அதன் முகப்பு :
- பிரிக்கும் முறை 1 (Normal)
- பிரிக்கும் முறை 2 (Express)
படிகள் :
படி 1 :
கோப்பினை தேர்வு செய்யுங்கள்...
படி 2:
பிரித்த கோப்பினை சேமிக்க வேண்டிய இடத்தினை தேர்வு செய்யுங்கள்...படி 3:
எவ்வளவு KB ,MB or GB என்பதனை தேர்வு செய்யுங்கள்.அல்லது Predefined பட்டனை கிளிக் செய்து தேர்வு செய்யுங்கள் .
படி 4:
பிரிக்கும் வேகத்தை தேர்வு செய்யுங்கள்...இப்பொழுது Split பட்டனை கிளிக் செய்யுங்கள் அவ்வளவுதான்.Have Fun :)
2.பிரிக்கும் முறை 2 (Express) :
Express என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்...
MozBackup - Firefox உலவியை Backup மற்றும் Restore செய்ய இலகுவான இலவச மென்பொருள்
Firefox உலவியை Backup செய்ய ஒரு இலகுவான இலவச மென்பொருள் .இதன் மூலம்Bookmarks, Passwords, Extensions, Themes போன்றவற்றை சுலபமாக Backup செய்யலாம். வேண்டியபொழுது Restore செய்து கொள்ளலாம்.கீழகண்ட முகவரிக்கு சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.இதனை நிறுவத் தேவை இல்லை.
தரவிறக்கி Unzip செய்து மென்பொருளை இயக்குங்கள்.Firefox உலவியின் இயக்கத்தை நிறுத்தி விட்டு முயற்சி செய்யுங்கள்.
Next பட்டனை கிளிக் செய்யுங்கள்...கீழ்கண்டவாறு தகவல் வந்தால் .FireFox இன்னும் இயங்கி கொண்டிருக்கின்றது என்று பொருள் ஆதலால் அதனை முதலில் நிறுத்துங்கள்.
மேற்கூறிய தகவல் வரவில்லை என்றால் அடுத்த படிக்கு செல்லுங்கள்.
கோப்பை சேமிக்கும் பாதையை தேர்வு செய்யுங்கள்Next பட்டனை கிளிக் செய்யுங்கள்.Backup செய்யும் கோப்பினை கடவுச்சொல் கொண்டு பாதுகாக்க விரும்பினால் Yes தேர்வு செய்யுங்கள்.
Yes தேர்வு செய்திருந்தால் கடவுச்சொல்லை தட்டச்சுங்கள்.
எவற்றையெல்லாம் Backup செய்ய வேண்டும் என்பதனை தேர்வு செய்யுங்கள்.
Next பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான்.Have Fun :)இம்மென்பொருள் மூலம் கீழ்கண்ட உலாவிகளையும் Backup செய்யலாம்.
Firefox உலவியை Backup செய்ய ஒரு இலகுவான இலவச மென்பொருள் .இதன் மூலம்Bookmarks, Passwords, Extensions, Themes போன்றவற்றை சுலபமாக Backup செய்யலாம். வேண்டியபொழுது Restore செய்து கொள்ளலாம்.கீழகண்ட முகவரிக்கு சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.இதனை நிறுவத் தேவை இல்லை.
தரவிறக்கி Unzip செய்து மென்பொருளை இயக்குங்கள்.Firefox உலவியின் இயக்கத்தை நிறுத்தி விட்டு முயற்சி செய்யுங்கள்.
Next பட்டனை கிளிக் செய்யுங்கள்...
கீழ்கண்டவாறு தகவல் வந்தால் .FireFox இன்னும் இயங்கி கொண்டிருக்கின்றது என்று பொருள் ஆதலால் அதனை முதலில் நிறுத்துங்கள்.
மேற்கூறிய தகவல் வரவில்லை என்றால் அடுத்த படிக்கு செல்லுங்கள்.
கோப்பை சேமிக்கும் பாதையை தேர்வு செய்யுங்கள்
Next பட்டனை கிளிக் செய்யுங்கள்.Backup செய்யும் கோப்பினை கடவுச்சொல் கொண்டு பாதுகாக்க விரும்பினால் Yes தேர்வு செய்யுங்கள்.
Yes தேர்வு செய்திருந்தால் கடவுச்சொல்லை தட்டச்சுங்கள்.
எவற்றையெல்லாம் Backup செய்ய வேண்டும் என்பதனை தேர்வு செய்யுங்கள்.
Next பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான்.Have Fun :)
இம்மென்பொருள் மூலம் கீழ்கண்ட உலாவிகளையும் Backup செய்யலாம்.