கணிணி செய்வது எப்படி

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - முதல் வகுப்பு

அட எவ்வளவு நாளைக்கு தான் நாம் மற்றவர் கையை எதிபார்ப்பது. மகாத்மா சொன்னது போல முடிந்த அளவு நாமே நாம் வேலைகளை தெரிந்து கொள்ளவேண்டும் அல்லவா.

இது கலி யுகம் மட்டும் அல்ல கணிணி யுகம் கூட தான் . முன்பு தொலை காட்சி இல்லாத வீடு வீடு இல்லை தற்போது கணிணி இல்லாத வீடு வீடு இல்லை என்றாகி விட்டது . அப்படி இரண்டற கலந்து விட்ட கணினியை கடை தெருவில் விற்கும் கத்திரிக்காய் மாதிரி கூவி வித்தவுடன் ஓடி போய் வாங்கி விட கூடாது .

ஒவ்வருவருக்கும் ஒரு தேவை இருக்கும் நாம் செய்ய போகும் வேலைகளுக்கு ஏற்ப உள்ள கணினியை தேர்ந்தெடுக்க வேண்டும் . மாணவர்களுக்கு , அலுவலகத்திற்கு , விளையாட்டு பிரியர்களுக்கு , இணையப் பயன் பாட்டுக்கு , கணிணி வல்லுனர்களுக்கு , இசை பிரியர்களுக்கு , பொது தேவைக்கு என பலவாறாக இருந்தாலும் நாம் அசெம்பிள் செய்ய போவது ஒரு பொது பயன் பாடுள்ள கணிணியை தான் .

முதல் வகுப்பு என்பதால் எளிதாக தொடங்க நினைக்கிறேன் , எனவே நாம் கேபினெட் என்பதில் இருந்து தொடங்குவோம் . இந்த கேபினெட் தான் சென்டரல் ப்ரோசெசசிங் யுனிட் என்பதை தன்னகத்தே கொண்டுள்ளது .

இதில் சென்ட்ரல் ப்ரோசெசசிங் என்பது கேபினெட் ,இன்புட் என்பது கீபோர்ட் ,மௌஸ் , ஔட்புட் என்பது மானிடர் ஆகியவற்றை குறிக்கும் . மெமரி என்பதுகணினியின் நினைவகத் திறன் . இந்த கேபினெட் உள்ளே தான் SMPS, மதர் போர்டு , ஹார்டிஸ்க் , மெமரி , ரைட்டர் , ப்லோப்பி டிரைவ்,cooler fan என அனைத்தும் இணைக்கப் பட்டு இருக்கும் . சரி கேபினெட் அப்பிடினா என்னானு பார்த்தோம் அது எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க படம் கிழே


 கேபினெட் வாங்கும் பொது சைடு பகுதியில் , மற்றும் பின் பகுதியில் பேன் வைக்கும் ஆப்ஸன் உள்ளதாக வாங்க வேண்டும் . ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் இந்த கேபினெட் மட்டும் சரி இல்லை என்றால் பேஸ்மென்ட் சரி இல்லாத வீடு மாதிரி தான் .

கேபினெட் விலை 900 rs - 2500 rs (சென்னை விலை)

நாம் அசெம்பிள் செய்ய வாங்க போகும் கேபினெட் zebronics விலை 1000 rs .

அடுத்த வகுப்பில் நாம் பார்க்க போவது கேபினெட் உடன் வரும் SMPS பற்றி


கணிணி- நாமே அசெம்பிள் செய்வது எப்படி - இரண்டாம் வகுப்பு

SMPS : SWITCH MODE POWER SUPPLY

காபினெட் உடன் இணைக்கப் பட்டருக்கும் இதன் வேலை நம் அன்றாடம் உபயோகப் படுத்தும் மின் அளவான 240 வோல்ட் மின்சாரத்தை 12 வோல்ட் DC ஆக மாற்றி மதர் போர்டு க்கு அனுப்பும் வேலையை செய்கிறது . சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு கன்வெர்ட்டர் . இதை AT மற்றும் ATX என இரு வகை யாக பிரிக்கலாம் . தற்போது ATX வகை கேபினட்களே பயன் படுத்தப்பட்டு வருகிறது. SMPS வேலை செய்யும் விதம் படமாக கிழே

SMPS விலை - 450 rs - 5100 rs

நாம் அசெம்பிள் செய்ய வாங்க போகும் SMPS Zebronics 400 வாட்ஸ் - 500 rs


கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - மூன்றாம் வகுப்பு

கேபினெட் SMPS அடுத்து நாம் பார்க்க போகும் முக்கியமான கணிணி பாகம் மதர்போர்டு . அப்படி என்ன இந்த மதர் போர்டில் இருக்கிறது என்று பார்த்தால் ஒட்டு மொத்த கணினியின் அணைத்து வேலைகளுமே இங்கிருந்து தான் தொடங்கி முடிகின்றன .

மதர் போர்டில் பல வகைகள் இருந்தாலும் அதிகமாக புழக்கத்தில் உள்ளது இன்டெல் வகை போர்ட்களே . விளையாட்டு பிரியராக இருந்தால் AGP ஸ்லாட் உள்ளதாக வாங்க வேண்டும் . படங்கள் அதிகமாக பார்பவராக இருந்தால் HDMI(High-Definition Multimedia Interface) சப்போர்ட் உள்ளதாகவும் , இசை பிரியர்களுக்கு சவுண்ட் கார்டு சப்போர்ட் உள்ளதாகவும் 5:1 அல்லது 7:1 ஸ்பீக்கர் சப்போர்ட் உள்ளதாகவும் வாங்கலாம் .

ராம் சப்போர்ட் ddr3 இருகிறதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். மதர் போர்டு வாங்கும் போது ப்ராஸ்ஸசர்(பொதுவாக LGA775) சப்போர்ட் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் . usb சப்போர்ட் 2 இருகிறதா மற்றும் sata ஹர்டிச்க் சப்போர்ட் செய்யுமா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.


இதில் பல பெயர்கள் சிலருக்கு புதியவையாக இருக்கும் அடுத்தடுத்து வரும் வகுப்புகளில் அவற்றை பற்றி விளக்கமாக பார்கலாம் .

மதர் போர்டு failure ஆனால் உடனே காட்டி கொடுப்பது கண்டன்சர்களே . செயல் இழந்த கண்டன்செர்கள் சற்று உப்பி அல்லது வெடித்து காணப் படும் . மதர் போர்டு உடன் வரும் மதர்போர்டு cd யை எப்போதும் இன்னொரு காப்பி எடுத்து கொள்ளவும் .

அலுவலகத்திற்கு கணிணி வாங்குவோர் லேன் போர்ட் உள்ள போர்டு தேர்ந்தெடுக்கவும் .தற்போது வரும் எல்லா போர்ட்களிலும் லேன் போர்ட் வருகிறது. parallel போர்ட் சப்போர்ட் செய்வதாகவும் இருக்க வேண்டும் ஏனனில் மென்பொருளுக்கு வரும் லைசென்ஸ் key சிலவை parallel port சர்ந்தவையே .

விளையாட்டு பிரியர்கள் அதிகமா வாங்குவது Nvidea கிராபிக்ஸ் கார்ட்களே . இவை தவிர ATI, ASUS உள்ளன . அதேபோல் இசை பிரியர்கள் நாடுவது creative அல்லது யமஹா சவுண்ட் கார்ட்களே .


எப்பெல்லாம் உங்க கணிணி தப்பா நேரத்த காட்டுதோ அப்ப உடனே உங்க மதர் போர்ட்ல இருக்கிற cmos battery ய மாத்திருங்க . இந்த cmos (complementary metal oxide semiconductor) வேலை என்னன்னா உங்க கணிணியின் போர்டு,ராம் ஹார்டிஸ்க் ஆகியவற்றின் வகைகளையும், நேரம் மற்றும் நாளையும் சேமித்து வைத்து கொள்ளும்.

நாம அசெம்பிள் செய்ய வாங்க போகும் மதர் போர்டு இன்டெல் G41 DG41KR - 4500 rs.

 அடுத்த வகுப்பில் நாம் பார்க்க போவது கணிணியின் இதயமான ப்ராஸ்ஸசரை பற்றி. 

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - நான்காம் வகுப்பு


மதர் போர்டு வாங்கும் போதே அதற்கு ஏற்ற ப்ரோசெசரை நாம் தேர்ந்தெடுத்து விட வேண்டும் . ப்ரோசெசர்கள் படி படியாக முன்னேற்றம் அடைந்து தற்போது core 2 quad என்ற அளவில் புழக்கத்தில் உள்ளன . ப்ரோசெசர்களில் ஒரு சிலவற்றை மட்டும் தற்போது தெரிந்து கொண்டால் போதும்.

பெண்டியம் 4 - வழக்கத்தில் இல்லை (வேண்டுமானால் விண்டோஸ் 98,2000 இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் )

dual core - ஒரு சில இடங்களில் மட்டும் (விலை குறைவாக செல்பவர்களுக்கு ) ஒபெரடிங் சிஸ்டம் xp க்கு போதுமானது

core 2 duo - பொதுவாக வாங்கப்படுவது (காமன் மேன்கள் வாங்குவது ஹிஹிஹி ) ஒபெரடிங் சிஸ்டம் விண்டோஸ் 7 க்கு தேவை

core 2 quad - சற்றே விலை கூடுதலானது .. high end என சொல்லலாம் விண்டோஸ் 7 மற்றும் சர்வர் களில் பயன்படும் .

Xeon - ப்ரோசெசர் கள் சர்வர் களில் பயன்படும்

mobile - ப்ரோசெசர் கள் லேப்டாப் களில் காணப்படும் ..

இதை தவிர AMD ப்ரோசெசர் களும் உபயோகப் படுத்தப் படுகின்றன .

கணிணி பாகத்தில் வெகு எளிதாக வெப்பமடையக் கூடிய பொருளாகும் . ஆகவே தான் இதன் மேலே heat sink and cooler fan பொருத்துகிறோம் .


2MB, 3MB cache எது
வேணும் உங்களுக்கு கேட்டா குழம்பாதீங்க ... அது ப்ரோசெசர் மெமரி தான் . மெயின் மெமரி (ராம்) அதிகமாக பயன் படுத்தும் டேட்டா வை ஸ்டோர் செய்து வைத்து கொள்ளும் திறன் தான் L1 மெமரி எனப் படுகிறது.

L2 மெமரி என்பது மதர் போர்டு இல் சால்டர் செய்யப்பட்டு , அல்லது ஸ்லாட் -இல் வரக் கூடியாது .

 நாம் வாங்கி அசெம்பிள் செய்யப் 
போகும் ப்ரோசெசர் இன்டெல் core 2 duo E7500 / 2.93 GHz இதன் விலை - 5,650 rs

அடுத்த வகுப்பில் நாம் பார்க்கப் போவது மெமரி (ராம்)..


கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - ஐந்தாம் வகுப்பு

நினைவு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் பரீட்சை எழுதும் போதோ , interview நேரத்திலோ அல்லது எதையாவது தேடும் போதோ உணர்ந்திடுவோம் .
நமக்கே நினைவு முக்கியமென்றால் நம் நினைவுகளை சேர்த்து வைக்கும் கணிணியின் நினைவு எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

நினைவுகளின் வகைகளை தற்போது மூன்றாக பிரிக்கலாம் . ஆனால் இவற்றில் அதிகம் பயன்படுத்தபடுவது ddr வகை ராம் களே .


அதிலும் இந்த ddr வகை ராமில் ddr 2 மற்றும் ddr 3 என இரு வகை பயன் படு உள்ளது. தற்போது அதிகம் வாங்கப் படுவது ddr 2 வகை ராமக இருந்தாலும் நமது மதர் போர்டு ddr 3 சப்போர்ட் உள்ளதாக பார்த்து வாங்க வேண்டும்.
நமது கணிணி அடிகடி restart ஆனாலோ அல்லது ஸ்டார்ட் ஆனவுடன் தொடர்ந்தோ அல்லது இருமுறை பீப் சவுண்ட் கேட்டால் இந்த ராமை நன்கு சுத்தம் செய்து ஸ்லோடில் போட வேண்டும் . அதே போல் கணிணி நினைவை அப்கிரேட் செய்யும் போது அது எத்தனை பஸ் ஸ்பீடோ அதற்கு ஏற்ற பஸ் ஸ்பீட் ராம் பார்த்து போட வேண்டும் . உதாரணமாக ddr 2 என்பது 667 mhz , 800 mhz அளவில் கிடைக்கிறது, அதே போல் ddr 3 1333 mhz அளவில் வருகிறது.

ஆபெரடிங் சிஸ்டத்தை பொருத்து முன்கூட்டியே மெமெரியை தேர்வு செய்து கொள்ள வேண்டும் .


நாம் வாங்கி அசெம்பிள் செய்யப் போகும் நினைவு Transcend ddr 2 2 GB(800 mhz) - 2100 rs.

அடுத்த வகுப்பில் நாம் பார்க்கப் போவது டேட்டாவை சேமித்து வைக்கும் இடமான ஹார்டிஸ்க்.. 

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - ஆறாம் வகுப்பு

ஹார்டிஸ்க் டேட்டாவை சேர்த்து வைக்கும் இடமாகவும் ஆபெரடிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யவும் தேவைப் படுகிறது . ஹார்டிஸ்கில் உள்ள ப்லோட்டர்கள் 5400 rpm வேகக்தில்(தற்போது 7200 rpm வேகத்தில் சுற்றும் ஹார்டிஸ்குகள் கிடைகின்றன) சுற்றும் போது டேட்டா(பழைய கிராம போன் முறைதான் ) பதியப் படுகிறது. டேட்டாவானது ஃபில்லிங் முறையில் நிரப்பப் படுகிறது .

அதி வேகத்தில் ஹார்டிஸ்க் சுற்றுவதால் ஒரு file ஒரே இடத்தில் பதிந்து வைக்க வாய்ப்பில்லை , அது சிறு பாக்கெட் களாக மாற்றப்பட்டு பல இடங்களிலில் ஃபில்லிங் இன்ஸ்டால் செயப் படுகிறது . நாம் file திறக்கும் போது பல இடங்களில் உள்ள அதன் பாக்கெட்கள் ஒன்று சேர்க்கப்பட்டு பின் முழு வடிவம் பெற்று திரையில் file ஆக தோன்றுகிறது . கணிணியில் file ஓபன் செய்ய அதிக நேரம் எடுக்கும் போது டிஸ்க் defragmentation மூலம் பல இடங்களில் சிறு சிறு பாக்கேட்களாக உள்ள file ஆனது சுருக்கப்பட்டு மாற்றப்படுகிறது .


மேலே உள்ள ஹார்டிஸ்க் செர்வரில் பயன் படகூடிய scsi வகையானதாகும். இதற்கென்று தனியாக scsi கார்டு மதர் போர்டில் இணைக்கப்பட்டு பயன் படும் .
விலை சற்று கூடுதலானதால் அலுவலகங்களில் மட்டுமே பயன் பாட்டில் உள்ளது .

மேலே உள்ள ஹார்டிஸ்க் IDE வகையானதாகும் . பொதுவாக உபயோகத்தில் இருந்தாலும் தற்போது இதன் பயன் படு குறைந்து பொய் உள்ளது. டெஸ்க்டாப் கணிணியில் அதிகம் பயன் படுத்தப் படுகிறது .

பொதுவான பயன் பாட்டில் உள்ளது IDE ஹார்டிஸ்களை விட sata ஹார்டிஸ்கள் வேகமானவை . டெஸ்க்டாப் கணிணியில் பயன்படுத்தப்படுபவை . sata முன்னமே வந்து விட்டாலும் அது வேகம் குறைவானதாக கருதப்பட்டு IDE வகை பயன் படுத்தப்பட்டன. பின்னர் சிறிது மாறுதலுக்கு பிறகு sata வகை சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது. sata 1.5Gbits வரை டேட்டா transfer செய்ய கூடியவை .


அடுத்த கட்ட தொழில்நுட்ப முன்னேற்றமாக esata வகை ஹார்டிஸ்க்கள் வந்துள்ளன . இவை sata வகையை விட இருமடங்கு வேகமாக டேட்டா transfer செய்ய வசதியானவை .

ஹார்டிஸ்க் வாங்கும் போது வாரண்டி சரி பார்த்து வாங்க வேண்டும் . பொதுவாக ஹார்டிஸ்க் 3 வருட வாரேன்டி சில வகை 5 வருட வாரேன்டிஉடனும் வருகின்றன . சீகேட் மற்றும் வெஸ்டேர்ன் டிஜிட்டல் இரண்டும் அதிக பயன் பாட்டில் உள்ளவை .

DVD, ப்லோப்பி மற்றும் pen டிரைவ் களை விட ஹார்டிஸ்க் டேட்டாவை அதிக காலம் வைத்திருக்க உதவுகிறது .ஹர்டிச்க்களை கையாளும் போது மிகவும் கவன்முடன் கையாள வேண்டும். அதில் உள்ள ப்லோடேர்கள் சிறிது இடம் மாறினாலும் முழுவதும் வீணாகி விடும் . அதேபோல் அதிக சத்தம் ஹார்டிஸ்குகள் இருந்து வர ஆரம்பித்து விட்டால் உடன் உங்களது பேக்கப்களை எடுத்து கொள்ள வேண்டும். ஏனனில் எப்போது வேண்டுமானாலும் அந்த ஹார்டிஸ்க் தன்னுடைய இயக்கத்தை நிறுத்தி கொள்ளலாம் . அதே போல் பவர்fluctuation இருந்தாலும் , அதிக பார்மட் செய்தாலும் ஹார்டிஸ்க் தன் மூச்சினை நிறுத்திவிடும் .

NTFS (நியூ டெக்னாலஜி file சிஸ்டம் ), FAT32 என இரு வகைகளில் பார்மட் செயப்பட்டு இருந்தாலும் தற்போது NTFS அதிகம் உபயோகப் படுத்தபடுகிறது.
பார்மட் அடிப்பதை பற்றி ஆபெரடிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யும் வகுப்பின் போது விரிவாக பார்க்கலாம்.

நாம் வாங்க போகும் ஹார்டிஸ்க் சீகேட் 500 gb - 2700 rs

அடுத்த வகுப்பில் நாம் பார்க்கப் போவது DVD டிரைவ், keyboard மற்றும் மௌஸ் 


கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - ஏழாம் வகுப்பு

பொதுவா கணிணி வாங்கிய உடனே நாம் பார்ப்பது படமாக தான் இருக்கும் . அப்படி படங்களை பார்பதற்கும் நமது டேட்டா பேக்கப் எடுபதற்கும் ,கணிணியில் மென்பொருள் இன்ஸ்டால் செய்ய, பாடல்களை கேட்க என எல்லாவற்றுக்கும் DVD டிரைவ் தேவையானது.

பொதுவாக இது மூன்று வகைகளில் வருகிறது.
1. ரீடர் ஒன்லி
2.கம்போ டிரைவ் (DVD read cd write )
3.ரைட்டர்


விலையில் அவ்வளவு வித்தியாசம் இல்லை என்றாலும் ரீடர் ஒன்லி அலுவலகங்களுக்கு (பாதுகாப்பு காரணங்களுக்காக ) அதிகம் பயன்படுகிறது . மற்றபடி எல்லோரும் வாங்குவது ரைட்டரைதான் . ரைட்டரில் அதிகம் விரும்பி வங்கப் படுவது சோனி, சாம்சுங் மற்றும் ஹட்ச்பி.

பொதுவான ரைட்டரில் ஏற்படும் பிரச்சினை என்று பார்த்தால் இரண்டு மட்டுமே . ஒன்று DVD read ஆகாது . இதற்கு உங்கள் DVD ரைட்டரின் லென்ஸ் சுத்தமாக துடைத்து வந்தால் பிரச்சினை வராது . இதற்காக தனியே கிளீனிங் DVD உள்ளது .
இரண்டு , DVD டிரைவில் ஏற்படும் ஓபன் மற்றும் க்ளோஸ் பிரச்சினை . இதை நாமே எளிதாக சரி செய்து விடலாம் .இதற்கு காரணமான ரப்பரை மாற்றினாலே போதும் , இதன் விலையும் 10 ரூபாக்குள் முடிந்து விடும் .

தற்போது ஒரு DVD யில் 4.5 GB ரைட் செய்ய முடியும் ,அதுவே டுயல் லேயர் DVD எனில் 8.5 GB ரைட் செய்ய முடியும் .தற்போது இவ்வகை DVD களை நாம் சினிமா படங்கள் வாங்கும் போது பார்க்கலாம் .

இனி வரும் காலங்களில் ப்ளூ ரே டிஸ்க் களும் எளிதாக புழக்கத்தில் வர ஆரம்பிக்கும் . ஒரு பளு ரே டிஸ்க் கில் ஒரு லேயர் எனில் 25 GB ம் இரண்டு லேயர் எனில் 50 GB ம் ரைட் செய்து கொள்ளலாம் .
இன்னும் நாம் 8.5 GB டிஸ்க் கில் நின்று கொண்டிருக்க , அடுத்த கட்ட டெக்னாலஜி ஆக Holographic Versatile டிஸ்க் கள் வர துவங்கி விட்டன . சுமாராக இதில் 1 TB(1024 GB) அளவு டேட்டா ஸ்டோர் செய்து கொள்ளலாம் . நாமல்லாம் எப்ப ப்ளூ ரே டிஸ்க் வந்து அப்புறம் HV டிஸ்க் வரத்துக்குள்ள அடுத்த பத்து டெக்னாலஜி வந்து போயிருக்கும் .
நாம் வாங்கி அஸம்பிள் செய்ய போகும் DVD ரிட்டர் சோனி - 1100 RS

கீபோர்ட் இல் PS/2 மற்றும் USB என இரு வகைகள் வந்தாலும் .அதிகம் உபயோகப்படுவது USB வகை கீ போர்ட்களே . wireless வகை கீபோர்ட் களை தவிர்ப்பது நலம் ஒரு சில பிளஸ் பாயிண்ட் கள் இருந்தாலும் அதற்கு பாட்டரி சார்ஜ் விரைவில் இறங்கி விடுவதால் பாட்டரி அடிகடி மாற்றி கொண்டே இருக்க வேண்டும் . அதே போல் மௌஸ் வாங்கும் போது ஒப்டிகால் USB வகை மௌஸ் களே மிகவும் சிறந்தது . பல் மௌஸ் வகைகளில் எளிதில் பால்களின் அடியிலும் மௌஸ் இன் உள்ளேயும் அழுக்கு படிந்து பழுதடைந்து விடும் .

கீபோர்ட் மற்றும் மௌஸ் இல் மைக்ரோசாப்ட் மற்றும் logitech இரண்டும் சிறந்து விளங்குகின்றன . இரண்டின் விலைக்கும் அதிக வித்தியாசம் இல்லை . எனவே நமக்கு பிடித்த மாடல்களுள் ஒன்றை தேர்வு செய்யலாம் . கீபோர்ட் வாங்கும் போதே மல்டிமீடியா கீபோர்ட் வாங்கி கொண்டால் படங்கள் பார்க்கும் போது மிகவும் உபயோகமாக இருக்கும். வாரம் ஒருமுறை மெலிதான துணி முலம் இவற்றை துடைப்பதன் முலம் தூசி படியாமல் பாதுகாக்க வேண்டும் .

நாம் வாங்க போகும் கீபோர்ட் மற்றும் மௌஸ் இன் விலை - 700 RS .

அடுத்த வகுப்பில் நாம் பார்க்க போவது மானிடர் . 


கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - எட்டாம் வகுப்பு

ஒரு கணிணியின் செயல்பாட்டினை உணர்த்துவதும் நாம் கொடுக்கும் இன்புட்களை அவுட்புட் களாக பார்க்க உதவுவது மானிடர் ஆகும் . பொதுவாக மானிடர் தான் கணிணியின் முதல் ஈர்ப்பாக அமைகிறது .

மானிடர்களை CRT LCD என இரு வகையாக பிரிக்கலாம். இதில் CRT வகை மானிடர்கள் அனலாக் தொழி நுட்பத்தில் தயாரானவை .இவை எளிதாக கையாள முடியாத, கனமான , அதிக மின்சாரத்தை எடுத்து கொள்பவை . தொடர்ந்து பார்க்கும் போது அதில் இருந்து வெளிப்படும் அதிக வெளிச்சம் கண்ணுக்கு கெடுதலை தரும் . விலை அளவில் பார்க்கும் போது இது மிகவும் சிக்கனமானது . பழுதாகும் பட்சத்தில் எளிதாக சரி செய்யலாம் . உதிரி பாகங்களும் எளிதாக கிடைக்கும் . தற்போது இதே CRT வகை மானிடர் இல் டிஜிட்டல் தொழில் நுட்மபும் சேர்ந்து வருகிறது . அதனால் கட்சிகளும் முன்னை விட சிறப்பானதாக தெரியும் .
இருந்தாலும் இடத்தினை அதிக அளவு ஆகிரமித்து கொள்வதாலும் LCD மானிடர் களின் விலை குறைய துவங்கி உள்ளதாலும் சந்தைகளில் விற்பனை குறைய துவங்கி உள்ளது .




LCD மானிடர் கள் குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சியை கண்டுள்ளன. இதற்கு பெரும் காரணமாய் இருப்பது இது கையாளவதற்கு மிகவும் எளிதானது . அத்துடன் மிக குறைந்த அளவே மின்சாரத்தை எடுத்து கொள்கிறது . இதில் காணும் கட்சிகள் நல்ல துல்லியத்துடன் கிடைகின்றன அதிக நேரம் கணிணியில் வேலை செய்வோர் பெரும்பாலும் விரும்புவது இவ்வகை மானிடர் களே . தற்போது சந்தைகளில் அதிகம் விற்கப்படுவது 20" ,22" வகை மானிடர்கள் தான் . ஏனனில் படங்கள் பார்பதற்கும் வேலை செய்வதற்கும் இத்தகைய மாடல்கள் பெரும்பான்மையாக விரும்பப்படுகின்றன .

நாம் LCD வகை கணிணியில் இருந்தாலும் தொழில் நுட்பம் எங்கோ சென்று கொண்டிருகிறது . LCD அடுத்து பிளாஸ்மா வகை மானிடர் கள் வர துவங்கி விட்டன . இவை LCD யை விட எடை குறைவானது அத்துடன் அதனை விட கட்சிகளை சிறப்பாக கட்ட கூடியாது . அனால் மின்சாரத்தை LCD யை விட அதிகமா எடுத்து கொள்ளும் . இதில் இருந்து வெளிப்படும் வெப்பத்தின் அழுவும் LCD யை விட அதிகமா இருக்கும் . மிகவும் அருகில் சென்று பார்த்தல் காட்சிகளில் சிறிது தெளிவில்லாமல் தெரியும் . இதன் விலை LCD வகையை விட சிறிது அதிகமே .

பாதி வீடுகளில் பிளாஸ்கே இல்லாத போது எங்கே பிளாஸ்மா பற்றி எண்ணுவது .

நாம் வங்கப் போகும் மானிடர் 20" சாம்சுங் - 7,400 RS

அடுத்த வகுப்பில் இருந்து ஒவ்வன்றாக சேர்த்து அசெம்பிள் செய்ய போகிறோம் .


கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - ஒன்பதாம் வகுப்பு



முதலில் காபினெட் உடன் SMPS யை அசெம்பிள் செய்ய வேண்டும் . பின்னர் மதர் போர்டு ஐ காபினெட் உடன் இன்னைக்க வேண்டும் . மதர் போர்டு காபினெட்டில் அசெம்பிள் செய்த வுடன் அதன் circuit எதுவும் காபினெட்டில் படாதவாறு சரி செய்து கொள்ள வேண்டும் . அவ்வாறு சரி செய்யா விடில் ஷார்ட் circuit ஏற்பட்டு போர்டனது பழுதாகிவிடும் . ஆகவே போர்டு அசெம்பிள் செய்யும் போது மட்டும் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் . அடுத்ததாக போர்டில் ப்ரோசெஸரை இணைக்க வேண்டும் . பொதுவாக ப்ரோசெச்சொரைன் ஒரு பக்கம் மட்டும் அம்புக்குறியிட்டு கட்டப் பட்டிருக்கும்
.
அதை கவனத்தில் கொண்டு போர்டில் ப்ரோசெஸரை இணைக்க வேண்டும் . பின்னர் அதன் மேல் கூலர் ஃபேன் பொறுத்த வேண்டும் . கூலர் ஃபேன்பொருத்தும் போதே அதற்கான பவர் கேபிள் இம் பொருத்தி விட வேண்டும் . ப்ரோசெசரின் வெகு அருகிலேயே அதற்கான பவர் source இருக்கும் .

பின்னர் நினைவகத்தை பொறுத்த வேண்டும் . பொருத்தும் போதும் நினைவகத்தின் கடியும் மதர் போர்டில் உள்ள காடியும் பொருந்துமாறு இணைக்க வேண்டும் .


பின்னர் பிரான்ட் பநெல் கோன்னேக்டோர்கள் முழுவதையும் இணைக்க வேண்டும் . மதர் போர்டு உடன் வரும் manual புக்கில் இதை பற்றி விரிவாக இருக்கும்.
இப்போது SMPS இல் உள்ள மதர் போர்டு க்கு பவர் கேபிள் ளை இணைக்க வேண்டும் . பின்னர் பவர் ஆன் செய்து ஒரு பீப் ஒலி கேட்டவுடன் பவர் ஆப் செய்யவும் . அவ்வாறு ஒலி கேட்டல் நம் இனைத்த அணைத்து இணைப்புகளும் மிக சரியாக இருக்கிறது என்று அர்த்தம் .அவ்வாறு இல்லாமல் தொடர் ஒலி எழுபினாலோ அல்லது ஒலி எழுப்ப பட விட்டாலோ நாம் இணைப்பை சரி பார்க்க வேண்டும் . ஒரு வேலை உங்கள் மதர் போர்டில் ஆன் போர்டு ஸ்பீக்கர் இல்லையெனில் நீங்கள் சரியாக இணைதிருந்தாலும் ஒலி வராது. உங்களுக்கு,CPU வில் மானிடர் இணைத்த பின் நீங்கள் சரி பார்க்கலாம் .


பின் ஹார்டிஸ்க் இணைக்க வேண்டும் . இதனை இணைக்கும் போது இரண்டு பக்கம் screw செய்வது அவசியம் . பின்னர் டேட்டா கேபிள் மற்றும் பவர் கேபிள் இரண்டையும் இணைக்க வேண்டும் . ஹார்டிஸ்க் இணைக்கும் முன் அதை சீரியல் நம்பர் நோட் செய்து கொண்டால் பின்னர் வாரேன்டி செக் செய்யும் போது ஹார்டிஸ்கை கழட்டி மாட்ட தேவையில்லை .

அதன் பின் DVDடிரைவ் இணைக்க வேண்டும் .


பின்னர் SMPS இல் இருந்து வரும் பவர் source ஐ ஹார்டிஸ்க் மற்றும் dvd டிரைவ் களுக்கு கொடுக்க வேண்டு
ம் .

மதர் போர்டு பற்றிய எளிதான தகவல் கல் கிலே

A-SATA
B-???
C-GPU
D-Heat Sink
E-LED
F-???
G-PCIe Slot
H-Capacitors
I-PCI Exp Slots
J-AGP Port
K-Audio
L-Ethernet/Firewire
M-USB
N-VGA Port
P-PS/2 Ports
R-Jumpers
S-Coil
T-Power
U-CPU Socket
V-RAM
W-Resistors
X-Chip
Y-Floppy Disk Header
Z-Power
2-Jumpers
3-Battery
4-BIOS
5-IDE Port
6
-IDE Port


கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - பத்தாம் வகுப்பு

கணிணியை பார்மட் அடிப்பது என்பது மிக எளிதான வேலை தான் . ஆனால் கணிணியை தேவையான அளவு partition பிரித்து நமது தேவைகேற்ப பிரித்து பின்னர் அதை FAT32 ஆகவோ NTFS ஆகவோ மாற்றுவது தான் வேலையே .

முதலில் partition பிரிப்பது எதற்கென்றால் ஒரே ஹார்ட்டிஸ்கில் நம் டேட்டா வை வைத்தால் பராமரிப்பது எளிதாக இருக்காது . மேலும் ஹார்ட்டிஸ்கின் செயல்பாடும் குறைந்து விடும் .

ஹர்ட் டிஸ்க் பார்மட் செய்ய பல வழிகள் இருந்தாலும் கிழ்கண்ட சிலவை அதிகம் பயன்படுகின்றன .

விண்டோஸ் bootable cd (FDISK)
தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் (partition magic )
விண்டோஸ் OS இன்ஸ்டால் செய்யும் போதே பிரிப்பது .


primary partion OS இன்ஸ்டால் செய்வதற்கு பயன்படும் . Extended மற்றும் logical partition கள் டேட்டா கையாள்வதற்கு பயன்படும் . ஆக OS இன்ஸ்டால் செய்வதற்கு எவ்வளவு ஒதுக்க வேண்டும் என்பது நமக்கு தெரியும் . இல்லைஎனில் ஒவ்வொரு விண்டோஸ் OS வேர்சின் னுக்கு எவ்வளவு ஒதுக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் சைட் இல் குறிபிட்டு உள்ளனர் . எடுத்துகாட்டாக விண்டோஸ் xp SP2 க்கு எவ்வளவு தேவை என பார்க்க ,
http://support.microsoft.com/kb/837783

பொதுவாக பார்மட் செய்யும் போது quick பார்மட் option ஐ தவிர்ப்பது நல்லது . புல் பார்மட் option எனில் ஹார்டிஸ்க் bad clusterkal குறைவதற்கான வைப்பு உள்ளது .


விண்டோஸ் இல் டிஸ்க் managament option மூலம் நாம் ஹர்ட் டிஸ்க் partition ஐ மாற்றி அமைக்கலாம் .ஆனால் primary partition ஐ மாற்றவோ பிரிக்கவோ இயலாது . மிக தேவையான தரணங்களில் மட்டுமே ஹார்ட் டிஸ்க் பார்மட் அடிக்கப்பட வேண்டும் . அடிக்கடி பார்மட் செய்தால் கண்டிப்பாக தன் செயல் திறனை ஹார்ட் டிஸ்க் இழந்து விடும் .

ஹார்ட் டிஸ்க் ஐ maintenance செய்வதற்கு விண்டோஸ் இல் option உள்ளது . தேப்ரக்மேண்டதியன் மற்றும் Error செக்கிங் மூலமாக நாம் சரி செய்து கொள்ளலாம் . அல்லது தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் கள் முலமும் சரி செய்து கொள்ளலாம் .

அடுத்த வகுப்பில் நாம் விண்டோஸ் xp OS இன்ஸ்டால் செய்வது மற்றும் விண்டோஸ் OS மூலம் பார்மட் செய்வது என இரண்டையும் காணலாம் . நெக்ஸ்ட் மீட் பண்ணு வோம் 

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - பதினோராம் வகுப்பு

கணிணியில் OS இன்ஸ்டால் செய்ய தேவையானவை விண்டோஸ் XP cd , மதர்போர்ட் டிரைவர் cd மற்றும் தேவையான மென்பொருள் தொகுப்புகள் .
முதலில் விண்டோஸ் XP bootable cd மூலம் கணிணியை பூட் செய்ய வேண்டும் . பின்னர் setup files load ஆகும் .


F8 பட்டன் அழுத்துவதன் மூலம் நாம் மைக்ரோசாப்ட் விதிகளுக்கு கட்டுப்பட்டு OS இன்ஸ்டால் செய்ய உள்ளோம் என்பதை குறிக்கும்.
முதல் option விண்டோஸ் இன்ஸ்டால் செய்வதற்கும் இரண்டாவது option விண்டோஸ் file பழுது பட்டு இருந்தால் பயன் படும் .
மேற்கண்ட படத்தில் ஒரு partition மட்டும் உள்ள ஹார்ட் டிஸ்க் பயன் படுத்தப்பட்டு உள்ளது . தற்போது அதிக அளவுள்ள ஹார்ட் டிஸ்க் கிடைப்பதால் நாம் தேவையான அளவு பிரித்து பார்மட் செய்த பின் OS இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் 


இன்ஸ்டால் முடிந்து restart ஆகும் போது பூட் வித் cd option ஐ பயன் படுத்த கூடாது .






இப்பொழுது நிறுவியுள்ள OS க்கு அண்டி வைரஸ் மென்பொருள் ஒன்றை நம் இன்ஸ்டால் செய்ய வேண்டும் . இல்லையெனில் கேளே உள்ள படத்தில் உள்ளதை போல் வந்து நமக்கு நினைவூட்டும் .


அண்டி வைரஸ் தொகுப்பு இன்ஸ்டால் செய்வது பற்றி பின் வரும் வகுப்புகளில் பார்க்கலாம். இப்போது நாம் OS இன்ஸ்டால் செய்தவுடன் அதை எவ்வாறு activation செய்வது என்று பார்க்கலாம் .

பெரும்பாலும் முதல் option மூலம் தான் activation கள் அதிகமாக செய்யபடுகிறது . இதற்கு கணிணி இணைப்பு அவசியம் வேண்டும் . அத்துடன் OS சீரியல் கீ தேவைப்படும் . இந்த கீ ஆனது நாம் வாங்கிய விண்டோஸ் XP cd உடன் வரும் .

பரவலாக நாம் ஒர்ஜினல் OS வாங்குவது இல்லை அதற்கு காரணம் விலை ஒன்றுதான் . சரி நீங்கள் நண்பர்கள் யாரிடம் இருந்தாவது வாங்கி இன்ஸ்டால் செய்து விடுகிறீர்கள் . உங்களிடம் இணைய இணைப்பும் இல்லை எவ்வாறு அதை activate செய்வது , எப்படி OS ஐ முழுமை படுத்துவது .

அதற்காக தான் activator கள் பயன்படுகின்றன . இந்த முறை பயன் பாட்டில் வைரஸ் பரவுவது அதிகமாகும் . ஏனனில் இவை யாவும் ஸ்கிரிப்ட் மூலம் இயக்கப் படுகிறது . அதிக பயன் பாட்டில் இவை இருந்தாலும் இவற்றை பயன் படுத்துவது குற்றமே . ஆகவே இதனை பற்றி அதிகம் சொல்ல போவதில்லை .

அடுத்த வகுப்பில் reinstall செய்வது பற்றி ....

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - பனிரெண்டாம் வகுப்பு

சரி நீங்கள் விண்டோஸ் reinstall செய்கிறீர்கள் எனில் அப்போது மீண்டும் OS activate செய்ய வேண்டுமா எனில் தேவை இல்லை . உங்கள் கணிணியில் உள்ள குறிப்பிட்ட file மட்டும் போதும் அதில் ஏற்கனவே உங்கள் கணிணியை பற்றி குறிக்க பட்டு இருக்கும் .

மேற்கண்ட file ஐ கோப்பி செய்து விட்டு reinstallation முடித்த உடன் மீண்டும் அதே இடத்தில் பேஸ்ட் செய்யும் போது நமது கணிணி activate செய்ய பட்டு விடும் .

கணினியை நீங்கள் விண்டோஸ் bootable cd மூலம் பூட் செய்து ரிப்பேர் option தேர்ந்தெடுத்து செய்யும் போது இதை செய்ய தேவை இல்லை . அதே போல் நீங்கள் ரிப்பேர் செய்யும் போது கணிணியில் உங்கள் C டிரைவ் இல் உள்ள file கள் எந்த பாதிப்பும் அடையாது .



விண்டோஸ் OS இன்ஸ்டால் முடிந்த உடன் ஆட்டோமாடிக் அப்டேட்ஸ் enable செய்து கொள்ள வேண்டும் . இதன் மூலம் நம் இனத்தில் இருக்கும் நேரத்தில் கணினியானது அதுவே அப்டேட்ஸ் டவுன்லோட் செய்து கொள்ளும். பின்னர் நமக்கு தேவையான இப்போது மொதேர்போர்ட் சத் இல் . உள்ள இப்போது இல்லாதவர்கள் அப்டேட் செய்வதற்கு விண்டோஸ் XP SP3 அப்டேட்ஸ் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

SERVICES.MSC மூலம் இதை நாம் enable செய்யவோ disable செய்யவோ முடியும் .
அப்டேட்ஸ் என்பது விண்டோஸ் இல் ஏற்படும் பிழைகளை நீக்குவதற்கும் , upgrade செய்வதற்கும் ,புதிய மாற்றங்களை உட்புகவும் பயன்படுதபடுவதாகும் .
இவை patches ஆகவோ சர்வீஸ் package ஆகவோ வெளிவரும் .

இப்போது மதர்போர்ட் cd இல் இருந்து டிரைவர் களை இன்ஸ்டால் செய்ய வேண்டும் . முதலாவதாக சிப்செட் இன்ஸ்டால் செய்யவும் . பின் வரிசையாக VGA, ஆடியோ , நெட்வொர்க் டிரைவர்களை இன்ஸ்டால் செய்ய வேண்டும் .
இதை தவிர ஏதேனும் ஹாட்பிக்ஸ் கள் கொடுக்கப் பட்டிருந்தால் அதனையும் இன்ஸ்டால் செய்ய வேண்டும் . முடிந்தால் டிரைவர்களை இன்னொரு cd இல் backup எடுத்து கொள்ள வேண்டும் . அல்லது நமது கணிணியின் மற்றொரு partition இல் காப்பி செய்து கொள்ள வேண்டும் . டிரைவர் கள் அனைத்தும் இன்ஸ்டால் செய்து முடித்த வுடன் கணிணியை restart செய்வது அவசியம் .

device மேனேஜர் க்கு சென்று கணிணியில் இன்ஸ்டால் செய்துள்ள டிரைவர்கள் பற்றியும் அதன் பதிப்பு குறித்தும் அறிந்து கொள்ளலாம் .


மேற்கண்ட படத்தில் device மேனேஜர் அக்செஸ் செய்வது கன்ட்ரோல் பனேல் வழியாக செல்லுமாறு உள்ளது . இது தவிர மை கம்ப்யூட்டர் ஐ ரைட் கிளிக் செய்து ப்ரோபெர்தீஸ் டேப் செலக்ட் செய்தால் அது சிஸ்டம் ப்ரோபெர்தீஸ் மெனு வை ஓபன் செய்யும் .
இதன் மூலமாகவும் device மேனேஜர் ஐ ஓபன் செய்யலாம் .

இதுவரை கணிணி அசெம்பிள் செய்வதை பற்றி எளிய நடையில் தந்துள்ளேன்