Friday, December 3, 2010

வணக்கம் வலையுலக மக்களே... என் நண்பர்கள் பலர் யாஹு மெசஞ்சரை உபயோக்கிறார்கள் ஆனாலும் அதில் யுனிகோட் தமிழில் அரட்டை அடிக்க முடியவில்லை என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.... நானும் வெகு காலமாக முயன்று பார்த்தேன் முடியவில்லை... பின் ஏதோ வலைத்தளத்தில் அது முடியும் என வாசித்தேன் முயன்றும் பார்த்தேன் சரியாக வந்தது. சரி என்று அதனை bookmark செய்தும் வைத்தேன்... பின் எனது கணனியினை format செய்யும்போது அந்த bookmarkகளை save செய்யாமல் அழித்துவிட்டேன்... பின் இன்று ஏதோ நினைவு வர திரும்பவும் அதனை முயன்று பார்த்து சரி வந்துவிட்டது.... தெரிந்ததை நான் மட்டும் வைத்திருந்தால் நல்லதல்ல என்பதால் உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்

முதலில் உங்கள் கணனியில் e-கலப்பை போன்றதொன்றை நிறுவிக்கொள்ளுங்கள்.(நான் உபயோகிப்பது e-கலப்பை. அதற்கு மட்டும்தான் சரி வருகிறதோ தெரியவில்லை அதோடு நான் எனது Operating System XP, vistaவில் வேலை செய்கிறதா என்னவோ தெரியவில்லை) e-கலப்பையை நிறுவியபின் யாஹு மசெஞ்சரில் log in ஆகி அதில் preferenceய் தெரிவு செய்யவும். இப்பொழுது உங்களுக்கு கீழே உள்ளது போன்ற ஒரு புதிய window திறக்கும்..



அதில் appearanceய் தெரிவு செய்யவும் அதில் change font & colors என்பதைத்தெரிவு செய்யவும்.... அப்பொழுது உங்களுக்கு கீழே காட்டப்பட்டிருப்பது போல் ஒரு புதிய window திறக்கும்..


அதில் fontஇல் TSCu_Paranar.ttf என்னும் fontஇனை தெரிவு செய்து okவினை கிளிக் செய்யவும்.... பின் preferanceல் okவினை கிளிக் செய்து சாதாரணமா யாஹூ மெசெஞ்சரில் அரட்டை அடிக்கும்போது யுனிகோடினை தெரிவு செய்து தமிழி டைப்பண்ணினால் கீழே உள்ளது போல் தமிழில் அழகாக வரும்



font தேவையானவர்கள் இங்கே download பண்ணிக்கொள்ளுங்கள்



No comments:

Post a Comment